ஏற்காடுக்கு அழைத்த நடிகர்.. அட்ஜஸ்ட்மெண்டால் என் சினிமா வாழ்க்கையே போச்சு.. புலம்பும் காயத்ரி ரேமா!
சென்னை: டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்திரி ரேமா, இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ஹரஹர மஹாதேவ, கிமோகினி, பேய் இருக்க பயமேன் ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைக்கூத்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர், அட்ஜஸ்ட்மெண்டால் என் சினிமா வாழ்க்கையே பாழாகி விட்டதாக மனம் வருந்தி பேசினார்.
அதில், முகமறியான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கங்கை அமரன், தயாரிப்பாளர் ராஜன், ஜாகுவார் தங்கம் என பலர் வந்திருந்தனர். அப்போது தயாரிப்பாளர் ராஜன், அன்றைய காலகட்டத்தில் தயாரிப்பாளர்களை நடிகர்கள் முதலாளி முதலாளி என்று தான் அழைப்பார்கள். ஆனால், இப்போது யாரும் அப்படி அழைப்பதும் இல்லை, தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்று பேசினார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் ஹீரேயினுக்கு இது முதல் படம் என்பதால், ஆடியோ லான்ச்சுக்கு வந்து இருக்காங்க, இரண்டு, மூன்றுகள் படங்கள் நடித்து விட்டால், பெரிய நடிகை ஆகிவடுவார்கள் அதன்பின், இசை வெளியீட்டு விழாவிற்கு வரமாட்டார்கள் என்று பேசி இருந்தார்.

நடிகை காயத்ரி ரேமா: அப்போது தான் எனக்கு தோன்றியது அந்த காலத்தில், ஒருவேளை தயாரிப்பாளர்கள் வந்தோமா, படத்தில் நடித்ததற்கு ஹீரோ, ஹீரோயினுக்கு பணம் கொடுத்தோமா என்று சென்று இருப்பார்கள். இதனால் நடிகர்கள் அவர்களை முதலாளிகள் என்று அழைத்து இருக்கலாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் தயாரிப்பாளர்கள் நடிகைகளிடம் எடுத்ததுமே அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசுவதால் அவர்கள் மீது மரியாதையை குறைந்து விடுகிறது. இப்போது இருக்கும் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அப்பா வயது உடையவர்களாகவும், தாத்தா வயது உடையவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி நாம் மதிக்கும் இடத்தில் இருக்கும் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசும்போது அது வேதனையாக இருக்கிறது.
ஏற்காடுக்கு அழைத்த நடிகர்: என்னை பலர் அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்து இருக்கிறார்கள், இதனால், பல திரைப்படத்தின் வாய்ப்பை நான் இழந்து இருக்கிறேன். பிரபல நடிகர் ஒருவரிடம் வாய்ப்பு தேடி சென்றேன், அவரின் ஒகே என்று சொல்லிவிட்டார்.பின் இரண்டு நாட்கள் கழித்து அந்த பிரபல நடிகர், ஏற்காடுக்கு போகலாம் என்று அழைத்தார். நான் உங்கள் மனைவியை அழைத்து போங்க சார் என்று போனை கட் செய்துவிட்டேன். இத்தனை, ஆண்டுகளாக நான் நடித்துக் கொண்டு இருந்தாலும் பிரகாசிக்க முடியாததற்கு காரணம் அட்ஜஸ்ட்மென்ட் தான். திறமையால் எனக்கு என்ன வாய்ப்பு கிடைக்கிறதோ அதுபோன்ற படத்தில் நடித்தால் போதும்.
இதை சரிய செய்ய வேண்டும்: உடனே சிலர், அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும் சினிமா துறையை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள் அதை விட்டுவிட்டு வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் என்று சொல்வார்கள். எல்லா துறைகளிலும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது. ஆகையால் இந்த அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும் பிரச்சனையை நாம் வெளியே கூறினால் தான் அதற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும். இதுபோன்று சினிமாவில் இருக்கும் சில விஷயத்தை வெளியில் சொல்லித்தான் கொஞ்சம் கொஞ்சம் மாற்றத்தை கொண்டு வர முடியும். இந்த தயாரிப்பாளர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார், அந்த ஹீரோ என்னிடம் இப்படி கேட்டார் என்று ஒருவரின் பெயரை குறிப்பிட்டு சொல்லுவதால் எதுவும் மாறிவிடாது. அதே போல சினிமாவில் இருப்பவர்கள் அனைவரும் மோசமானவர்கள் என்று சொல்லவில்லை, எத்தனையோ நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று நடிகை காயத்ரி ரேமா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











