டோணிக்கு திருமணமாகிடுச்சுன்னு தெரியும், இருந்தாலும் அவருடன்...: நடிகையின் வினோத ஆசை
ஹைதராபாத்: நடிகை கியாரா அத்வானி கிரிக்கெட் வீரர் டோணியுடன் டேட்டிங் போக விரும்புகிறார்.
கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. டோணியின் மனைவி சாக்ஷியாக நடித்தார் கியாரா. டோணி பட விளம்பர நிகழ்ச்சிகளில் தன்னை ஒதுக்கியதாக வருத்தப்பட்டார்.
தற்போது அவர் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

கியாரா
கியாரா மகேஷ் பாபு ஜோடியாக பரத் அனே நேனு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை கொரடலா சிவா இயக்கி வருகிறார்.

சிம்பிள்
டோணி தனது மனைவி, மகளை நடத்தும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எவ்வளவோ சாதனை செய்தும் மிகவும் சாதாரணமாக இருக்கும் அவரின் குணம் எனக்கு பிடித்துள்ளது என்கிறார் கியாரா.

ஆசை
டோணிக்கு திருமணமாகிவிட்டது என்று எனக்கு தெரியும். இருப்பினும் அவருடன் டின்னர் டேட் போக ஆசைப்படுகிறேன். அவ்வாறு சென்றால் நான் அவரை பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடியும் என்று கியாரா தெரிவித்துள்ளார்.

சூரஜ்
கியாரா அத்வானியும் பாலிவுட் நடிகர் சூரஜ் பஞ்சோலியும் காதலிப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சூரஜ் நடிகை ஜியா கானை காதலித்தார். ஜியா காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











