தாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள்: யாரை சொல்கிறார் நடிகை ரீமா கல்லிங்கல்?

By Siva

Recommended Video

தாத்தா வயதில் இருக்கும் ஹீரோவுக்கு இன்னும் கதை எழுதுகிறார்கள்..!!

திருவனந்தபுரம்: நடிகர் 70 வயது தாத்தாவாகவே ஆனாலும் அவருக்காக கதை எழுதுகிறார்கள். ஆனால் நடிகைகளுக்கு அப்படி இல்லையே என்று ரீமா கல்லிங்கல் தெரிவித்துள்ளார்.

ஹீரோயினுக்கு திருமணமானால் அவரது மார்க்கெட் பாதிக்கப்படுகிறது. குழந்தை பிறந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் இது குறித்து திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ரீமா கல்லிங்கல் பேசியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருப்பதாவது,

பெண்கள்

பெண்கள்

சமூக வலைதளங்களில் பெண்களை அவமதிப்பது அதிகரித்துள்ளது. ஒரு நடிகையின் ஃபேஸ்புக் பக்கத்தில் கமெண்ட் பகுதிக்கு சென்று பார்த்தால் தெரியும். நாங்கள் என்ன உடை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்தியிருப்பார்கள்.

சம்பளம்

சம்பளம்

நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் எங்களுக்கு கிடைக்கிறது. கேட்டால் சாட்டிலைட் உரிமம் உள்ளிட்ட விஷயங்களில் எங்களுக்கு மதிப்பே இல்லை என்கிறார்கள்.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

ஒரு நடிகர் 20 முதல் 70 வயதாக இருந்தாலும், திருமணமாகியிருந்தாலும் சரி ஆகவில்லை என்றாலும் சரி, குழந்தைகள் ஏன் பேரக் குழந்தைகள் இருந்தாலும் சரி அவர்களுக்காக கதை எழுதுகிறார்கள். அவரின் கெரியரை உயர்த்த படம் எடுக்கிறார்கள். அதற்காக ஒரு கலைஞராக சந்தோஷப்படுகிறேன். ஆனால் ஒரு நடிகையாக சந்தோஷப்பட முடியவில்லை.

படம்

படம்

ஒரு நடிகை தனது சொந்த வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரின் சினிமா வாழ்க்கையை பாதிக்கிறது. திருமணமானால், விவாகரத்தானால், குழந்தை பெற்றால் என்று என்ன செய்தாலும் கெரியரை பாதிக்கிறது என்றார் ரீமா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X