தோனி குமாரு.. ரஜினி ராதா.. நாட்டாமை சரத்.. 'பக்கா' படத்தில் இத்தனை ரெஃபரன்ஸா?

By Vignesh Selvaraj

சென்னை : எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, சூரி, சதீஷ் மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகியிருக்கிறது 'பக்கா' திரைப்படம். இப்படத்தில் ரசிகர்களை ஈர்க்க பலரது ரெஃபரன்ஸுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

படம் தொடங்கும்போதே, விக்ரம் பிரபு அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடுகிறார். திருவிழா நடைபெறும்போது காட்டப்படும் பேனர்களிலும் அஜித்தின் படங்கள். அடுத்து விஜய் பாடலோடு விஜய் ரசிகர்களின் பேனர் காட்டப்படுகிறது.

References used in Pakka movie

இப்படத்தின் ஹீரோயின் நிக்கி கல்ராணி வெறித்தனமான ரஜினி ரசிகை. இவரது கேரக்டர் பெயரே ரஜினி ராதா தான். ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, ரஜினி பிறந்தநாளுக்கு ஊருக்கே பிரியாணி போட்டுக் கொண்டாடுவது எனச் செய்கிறார்.

அவ்வப்போது ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பாக விழாக்கள் நடத்துவது, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது என ரஜினி ரசிகர்களைக் கவர்வதற்காக பல ஐடியாக்களை பயன்படுத்தி இருக்கிறார்கள் படத்தில்.

References used in Pakka movie

நாயகன் விக்ரம் பிரபு இப்படத்தில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் முரட்டு ரசிகராக நடித்திருக்கிறார். இவரது கேரக்டர் பெயர் 'தோனி குமாரு'. உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியா ஜெயிப்பதற்காக ஊரில் இருக்கும் இளைஞர்கள் 'பால்' குடம் எடுப்பது ஹைலைட்.

படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் ஆனந்தராஜ் 'நாட்டாமை' படத்தின் சரத்குமார் கேரக்டரை பிரதிபலிப்பது போல வருகிறார். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் பின்னணியில் நாட்டாமை பிஜிஎம்-மை ஒலிக்க விட்டிருக்கிறார்கள்.

விக்ரம் பிரபுவை அடிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், அதற்கு முன்பு ரௌடிகளை அடிக்கும்போது கேப்டன் ஸ்டைலை பயன்படுத்தி இருப்பார். வண்டியின் கதவில் ஒரு காலை வைத்து இன்னொரு காலில் எகிறி ரௌடியை எத்துவார்.

இப்படி படம் முழுக்க பலரது ரெஃபரன்ஸுகளை பயன்படுத்தி இருந்தாலும் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. கிராமத்து கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் நிறைய விஷயங்கள் மிஸ்ஸாகியிருப்பதால் ரசிகர்களை திருப்தி செய்யத் தவறியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X