ஆக்ஷன் அவதாரத்திற்கு மாறும் ரெஜினா -நிவேதா தாமஸ்... பயிற்சி கொடுக்கும் கொரியன் மாஸ்டர்

ஐதராபாத் : ரெஜினா மற்றும் நிவேதா தாமஸ் இணைந்து தெலுங்கில் சாகினி -தாகினி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றனர்.

மிட்நைட் ரன்னர்ஸ் என்ற கொரியன் படத்தின் ரீமேக்கான இந்த படம் உருவாகி வருகிறது. படத்தை சுதீர் வர்மா இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ரெஜினா மற்றும் நிவேதா இருவரும் சண்டை காட்சி ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் அதற்காக பயிற்சி பெற்று வருவதாகவும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சாகினி -தாகினி படம்

சாகினி -தாகினி படம்

மிட்நைட் ரன்னர்ஸ் என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் சாகினி -தாகினி என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரெஜினா கசான்ட்ரா மற்றும் நிவேதா தாமஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சுதீர் வர்மா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

ஆக்ஷன் காட்சி

ஆக்ஷன் காட்சி

இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் முதல் ரெஜினா மற்றும் நிவேதா இருவரும் எதிரெதிர் துருவங்களாக சண்டையிடும் ஆக்ஷன் காட்சியை படமாக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கென நிவேதா மற்றும் ரெஜினா இருவரும் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.

கொரியன் மாஸ்டரிடம் பயிற்சி

கொரியன் மாஸ்டரிடம் பயிற்சி

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கொரியன் படத்திற்கு சண்டை பயிற்சி கொடுத்த இயக்குநரையே ஐதராபாத்திற்கு வரவழைத்து இவர்கள் இருவருக்கும் பயிற்சி கொடுக்க வைத்து வருகின்றனர். இந்த படத்தை சுனிதா தாதி என்பவர் தயாரித்து வருகிறார்.

Recommended Video

என் கவர்ச்சி உடையின் ரகசியம் | OPEN TALK WITH REGINA CASSANDRA-P-02|FILMIBEAT TAMIL
ஆக்ஷன் நாயகிகள்

ஆக்ஷன் நாயகிகள்

வரும் தசராவிற்கு இந்த படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அழகான ஹீரோயின்களாக ஹீரோக்களுடன் டூயட் பாடி வந்த ரெஜினா கசான்ட்ரா மற்றும் நிவேதா தாமஸ் இருவரையும் இத்தகைய ஆக்ஷன் நாயகிகளாக மாற்றும் இயக்குநரின் முயற்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X