Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அருண் விஜய்யுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய ரெஜினா கசாண்ட்ரா!
சென்னை: எம்புட்டு இருக்குது ஆசை என உதயநிதி ஸ்டாலின் ரொமான்ஸ் செய்தாலும், ரசிகர்களின் பார்வை மொத்தம் ஹாட் அண்ட் பியூட்டி ரெஜினா கசாண்ட்ரா மீது தான்.
அந்த அளவுக்கு தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணு ரெஜினா கசாண்ட்ராவின் 29வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
டோலிவுட், பாலிவுட் படங்களில் பிசியாகி இருக்கும் ரெஜினா, அருண் விஜய்யின் ஏவி 31 படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
நடிப்புக்கு கொஞ்சம் ரெஸ்ட்... இப்போ ஃபுல்லா பாட்டுல இறங்கிட்டேன்... பா. விஜய்

ஹாட் அண்ட் பியூட்டி
ரெஜினா கசாண்ட்ரா நல்ல ஹைட் மற்றும் நல்ல கவர்ச்சியான உடல் தோற்றம் கொண்டவர். ஆரம்பத்தில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரெஜினா கசாண்ட்ராவுக்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் தமிழில் பெரிதாக வரவில்லை. அதனால், கவர்ச்சி பக்கம் தனது ரூட்டை மாற்றிய ரெஜினாவுக்கு தெலுங்கில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது.

முதல் படம்
ப்ரியா இயக்கத்தில் பிரசன்னா, லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் படத்தில் தான் முதன் முறையாக தமிழ் சினிமாவில் ரெஜினா கசாண்ட்ரா அறிமுகமானார். சிறு வயதில் இருந்தே ஸ்ப்லாஷ் எனும் டிவி தொடரில் நடித்து வந்த ரெஜினா கசாண்ட்ரா பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

தளபதி 64 இயக்குநர்
தளபதி விஜய்யின் 64வது படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜின் அறிமுக படமான மாநகரம் படத்தில் ரெஜினா கசாண்ட்ரா அசத்தலாக நடித்திருந்தார். பல முகம் தெரியாத நடிகர்கள் நடிப்பில் உருவான மாநகரம் படத்திற்கு முகவரியாக இருந்தது ரெஜினா கசாண்ட்ரா தான். ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட படத்தின் புரொமோஷன் போஸ்டர்களில் ரெஜினா தான் இருப்பார்.

90ஸ் கிட்
டிசம்பர் 13, 1990ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ரெஜினா கசாண்ட்ரா. 29 வயதாகும் ரெஜினா கசாண்ட்ராவும் 90ஸ் கிட் தான்.
|
கார்ஜியஸ் குயின்
ரெஜினா கசாண்ட்ராவின் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, கார்ஜியஸ் குயினுக்கு ஹேப்பி பர்த்டே என இந்த ரசிகர் வாழ்த்தியுள்ளார்.
|
ராஷ்மிகா ரசிகர்கள்
ரெஜினா கசாண்ட்ராவின் பிறந்த நாளை முன்னிட்டு, டோலிவுட்டின் இளம் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்கள் ரெஜினாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
|
டேலன்ட் நடிகை
டேலன்ட் மற்றும் கார்ஜியஸ் நடிகை ரெஜினா கசாண்ட்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என தயாரிப்பு நிறுவனமான ஸ்க்ரீன் பல்னாடு வாழ்த்தியுள்ளது.
|
அருண் விஜய்யுடன் கேக் கட்டிங்
அருண் விஜய்யின் 31வது படத்தை இயக்குநர் அறிவழகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருகிறார். ரெஜினாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏவி 31 ஷூட்டிங் ஸ்பாட்டில் அருண் விஜய் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து ரெஜினா கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.