சிரஞ்சீவியுடன் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட ரெஜினா கசாண்ட்ரா… ஊ சொல்றியா மாமாவை மிஞ்சுமா !
சென்னை : ஆச்சாரியா படத்தில் சிரஞ்சீவியுடன் ஐட்டம் பாடலுக்கு கலக்கலாக ஆட்டம் போட்டுள்ளார் ரெஜினா கசாண்ட்ரா.
இந்த திரைப்படம் பிப்ரவரி 4ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், துள்ளல் ஆட்டம் போட வைத்தம சானா கஷ்டம் வெளியாகி ஆட்டம் போட வைத்துள்ளது.
சமந்தாவின் ஊ சொல்றியா மாமா.. ஊஊ சொல்றியா மாமா பாடல் ஹிட்டடித்த பிறகு, அதேபோல ஐட்டம் பாடல்கள் அதிக அளவில் வெளிவருகின்றன.

ஆச்சாரியா
கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், சோனு சூட், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் உள்ள படம் ஆச்சாரியா. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கியது.

பிப்ரவரி ரிலீஸ்
இந்நிலையில் இத்திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிலிருந்த நிலையில், ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரியில் வெளியாக இருந்ததால் ஆச்சாரியா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி 4-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.

ஐட்டம் சாங்
இந்நிலையில் ஆச்சாரியா திரைப்படத்திலிருந்து கலக்கலான ஐட்டம் பாடலின் லிரிக் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த பாடலில், மெகா ஸ்டார் சிரஞ்சீவுடன் ரெஜினா கசாண்ட்ரா துள்ளலாக ஆட்டம் போட்டுள்ளார். தமிழில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரெஜினா கவர்ச்சி ததும்ப ததும்ப தாறுமாறான உடையில் குத்தாட்டம் போட்டுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த பாடல் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.
ஊ சொல்றியா மாமா..
புஷ்பா திரைப்படத்தில் நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா.. ஊஊ சொல்றியா மாமா பாடலுக்கு போட்ட ஆட்டத்தையே ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்து வரும் நேரத்தில் அதேபோல மேலும் ஒரு ஐட்டம் சாங் வெளியாகி உள்ளது. இந்த சாங்கும் நிச்சயம் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











