சூர்ப்பனகை.. ரெஜினா கசாண்ட்ராவின் மூக்கை அறுக்கப் போவது யாரோ.. மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: ரெஜினா கசாண்ட்ராவின் சூர்ப்பனகை ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களை மிரட்டி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்ப்பனகை ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
ஆப்பிள் ட்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகி உள்ள சூர்ப்பனகை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது.
மிரட்டும் டைட்டில்
ராமாயண இதிகாசத்தில் ராவணின் தங்கை பெயரான சூர்ப்பனகை எனும் தலைப்பை இந்த படத்திற்கு வைத்துள்ளனர். தெலுங்கில், Nenenaa என்ற டைட்டிலில் இந்த படம் உருவாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
கார்த்திக் ராஜு
திருடன் போலீஸ், உள்குத்து, கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் ராஜு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சூர்ப்பனகை படத்தை இயக்கி வருகிறார். திருடன் போலீஸ் திரைப்படத்தில், விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

ஆப்பிள் ட்ரீ ஸ்டூடியோஸ்
மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ள ரெஜினா கசண்ட்ரா நடிப்பில், பேய் படமாக உருவாகி வரும் சூர்ப்பனகை படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆப்பிள் ட்ரீ ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது.
டிரெண்டிங்
சூர்ப்பனகை படத்தின் அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக்குடன் ஆர்ப்பாட்டமாக வெளியாகி உள்ள நிலையில், #Soorpanagai, #NeneNaa, #AppleTreeStudios உள்ளிட்ட ஹாஷ்டேக்குகள் தென்னிந்தியா முழுவதும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ராவுக்கு இரு மொழிகளிலும் இருக்கும் ரசிகர்கள், இந்த ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அடுத்த அருந்ததியா?
சூர்ப்பனகை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், அனுஷ்காவின் அருந்ததி, பாகமதி படங்களை போல இருக்கிறது என்றும், அடுத்த அருந்ததியா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், இரும்பு முட்கள், ரெஜினாவை நசுக்குவது போன்று அதிபயங்கரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











