ரெண்டே நிமிஷம் தான், ஆண்களை மேகி நூடுல்ஸுடன் ஒப்பிட்ட ரெஜினா: அடல்ட் காமெடிக்கு அளவே இல்லையா?
ஐதராபாத்: தெலுங்கில் ரெஜினா, நிவேதா தாமஸ் இருவரும் இணைந்து நடித்துள்ள சாகினி டாக்கினி திரைப்படம் வரும் 16ம் தேதி வெளியாகிறது.
ஆக்சன் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள சாகினி டாக்கினி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரெஜினா ஆண்களை மேகி நூடுல்ஸுடன் ஒப்பிட்டு பேசிய அடல்ட் காமெடி டிரெண்டாகி வருகிறது.

கவனம் ஈர்க்கும் சாகினி டாக்கினி
தெலுங்கில் சுதிர் வர்மா இயக்கத்தில் ரெஜினா, நிவேதா தாமஸ் இணைந்து நடித்துள்ள படம் சாகினி டாக்கினி. ரெஜினா, நிவேதா தாமஸ் இருவரும் போலீஸாக நடித்துள்ள இந்தப் படம், ஆக்சன் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இரு தினங்கள் முன்னர் வெளியான சாகினி டாக்கினி ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. முதலில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருந்த இந்தப் படம், நாளை மறுநாள் (செப் 16) திரையரங்குகளில் வெளியாகிறது.

ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ரெஜினா
தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, லோகேஷ் கனகராஜ்ஜின் முதல் படமான மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, தலைவி என பல படங்களில் நடித்துள்ள ரெஜினா, சாகினி டாக்கினி படத்தில் லீடிங் ரோலில் நடித்துள்ளார். அதேபோல், நிவேதா தாமஸ் தமிழில் ரஜினியுடன் தர்பார், கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யுடன் ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரும் ரெஜினாவுடன் இணைந்து லீடிங் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் 'சாகினி டாக்கினி' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அசால்ட்டாக சொன்ன அடல்ட் காமெடி
தனியார் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு இருவரும் பேட்டியளித்துள்ளனர். அப்போது ரெஜினா அடல்ட் ஜோக் ஒன்றை சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த நிகழ்ச்சியில் சாப்பிட்டபடியே பேசும் ரெஜினா, "நான் ஒரு அடல்ட் ஜோக் சொல்றேன், ஆண்களும் மேகியும் ஒரே மாதிரியானவர்கள் தான், ஏனென்றால் இரண்டு நிமிடங்களில் இரண்டும் முடிந்துவிடும்" என தெலுங்கில் கூறியுள்ளார். ஆனால் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளருக்கு அதை உடனடியாக புரிந்துகொள்ள முடியவில்லை.

மழுப்பலாக சிரித்த நிவேதா தாமஸ்
ரெண்டே நிமிடத்தில் ரெண்டும் முடிந்துவிடும் என அசால்ட்டாக ரெஜினா சொன்ன காமெடியை கேட்ட நிவேதா தாமஸ், இந்த அடல்ட் ஜோக்கை புரியாதது போலவே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும், அவரது மழுப்பலான சிரிப்பு, ரெஜினாவின் அடல்ட் காமெடியை ரசித்ததை வெளிப்படுத்தியுள்ளது. ரெஜினாவின் இந்த ஜோக், ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்துள்ளது. ஆண் இனத்தை இப்படி அவமானப்படுத்துவதா என சில ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பொங்கியும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











