சிரஞ்சீவி மருமகனை காதலிக்கிறாரா ரெஜினா?
Recommended Video

ஹைதராபாத்: நடிகை ரெஜினாவும், நடிகர் சாய் தரம் தேஜும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து தேஜ் விளக்கம் அளித்துள்ளார்.
பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் நடித்ததில் இருந்தே ரெஜினா கசான்ட்ராவுக்கும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுன் சகோதரியின் மகனும், நடிகருமான சாய் தரம் தேஜுக்கும் இடையே காதல் என்று பேசப்படுகிறது.
2014ம் ஆண்டில் இருந்தே அவர்களுக்கு இடையே காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

சாய் தரம் தேஜ்
ரெஜினாவுடன் காதலா என்று கேட்டதற்கு சாய் தரம் தேஜ் இல்லை என்கிறார். நானும், ரெஜினாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே, வேறு ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார் அவர்.

நண்பர்கள்
திரையுலகை சேர்ந்த ஆணும், பெண்ணும் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கூறினால் அது காதல் என்று தான் அர்த்தம். அப்படி கூறிய பலர் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று விபரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

பாபு காரு
சாய் தரம் தேஜ் ரெஜினாவை செல்லமாக பாப்பா என்று அழைப்பாராம். பதிலுக்கு ரெஜினா அவரை பாபு காரு என்று கூப்பிடுவாராம். தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த ரெஜினா தற்போது கோலிவுட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.

சர்ச்சை
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ஏக் லட்கி கோ தேக்கா தோ ஐசா லகா படம் மூலம் பாலிவுட் பக்கம் சென்ற ரெஜினா ஓரினச்சேர்க்கையாளராக நடித்தார். முதல் இந்தி படத்திலேயே தைரியமாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அவர்.


Click it and Unblock the Notifications











