»   »  செய்யட்டுமா என ரஜினி கடவுளை கேட்கிறார், இந்த நடிகை மனசை கேட்கிறார்

செய்யட்டுமா என ரஜினி கடவுளை கேட்கிறார், இந்த நடிகை மனசை கேட்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனசை கேட்டு தான் கதாபாத்திரத்தை தேர்வு செய்வதாக நடிகை ரெஜினா கசான்ட்ரா தெரிவித்துள்ளார்.

கண்ட நாள் முதல் படம் மூலம் நடிகையானவர் சென்னை பொண்ணு ரெஜினா கசான்ட்ரா. நடிக்க வந்த புதிதில் வெற்றி கிடைக்காவிட்டாலும் அவர் முயற்சியை கைவிடவில்லை.

விடா முயற்சியால் அவர் தற்போது தெலுங்கு, தமிழ் திரையுலகில் கவனிக்கப்படும் நாயகியாக மாறியுள்ளார்.

உதயநிதி

உதயநிதி

தமிழ் சினிமாவிலேயே சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை ரெஜினா கசான்ட்ரா என்று அவருடன் சேர்ந்து சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின் பெருமையாக கூறினார்.

அழகு

அழகு

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா, தியானம், நிறைய தண்ணீர் மற்றும் ஜூஸ் குடிப்பதே தனது அழகின் ரகசியம் என ரெஜினா தெரிவித்துள்ளார்.

கிளாமர்

கிளாமர்

கிளாமர் என்று தனியாக இல்லை. எனக்கு சவுகரியமாக இருந்தால் நடிப்பேன். மனசை கேட்டுத் தான் கதாபாத்திரத்தை முடிவு செய்து நடித்து வருகிறேன். மனசுக்கு சரி என்று படும் படங்களில் நடிக்கிறேன் என்கிறார் ரெஜினா.

பிசி

பிசி

ரெஜினா தற்போது 3 தமிழ் படங்கள், ஒரு தெலுங்கு படம் என்று படுபிசியாக உள்ளார். ஓடியோடு நடித்துக் கொண்டிருப்பதால் தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இதுவும் நன்றாக உள்ளது என்று ரெஜினா தெரிவித்துள்ளார்.

English summary
Actres Regina Cassandra says that she listens to her heart when it comes to choose her role in movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil