நடிகை ரெஜினாவின் 'லெஸ்பியன்' அவதாரம்... ஏன் இப்டி எல்லாம் நல்லா தானே போய்ட்டு இருக்கு!
எக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா படத்தில் நடிகை ரெஜினா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னை: அனில் கபூர் நடிக்கும் இந்தி படத்தில் நடிகை ரெஜினா கஸன்ட்ரா லெஸ்பியன் ரோலில் நடிப்பது தெரியவந்துள்ளது.
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை ரெஜினா கஸன்ட்ரா. மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் பிகினி உடையில் நடித்த பிறகு, அவரது மார்க்கெட் எகிறிவிட்டது. சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கு சிலுக்குவார்பட்டி சிங்கம் படமும் ரெஜினாவின் மார்க்கெட்டை தக்கவைத்திருக்கிறது.

மேலும் நடிகை ரெஜினா நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை, உள்ளிட்ட படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதுதவிர புதிய படங்கள் சிலவற்றிலும் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியில் ஷெல்லி சோப்ரா தர் இயக்கத்தில், அனில் கபூர், ஜூஹி சாவ்லா, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள 'எக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா' படத்தில் ரெஜினா நடித்துள்ளார்.
இந்த படத்தின் கதைப்படி சோனம் கபூர் ஒரு லெஸ்பியன். அவருக்கு திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் முடிவு செய்யும் போது, நடக்கும் கலேபரங்கள் தான் படத்தின் கதைகளம். இந்த படத்தில் சோனம் கபூரின் பெண் காதலியாக, மற்றொரு லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை யார் என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி அந்த சஸ்பென்சை உடைத்துள்ளது. அதுவும் ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் அந்த காட்சியை ப்ரீஸ் செய்து பார்க்கும் போது, சோனம் கபூரின் காதலியாக நடித்திருப்பது ரெஜினா கஸன்ட்ரா என்பது தெரியவந்துள்ளது.
கலாச்சார மாற்றத்தின் சாட்சியாக உருவாகியுள்ள இப்படத்தில் லெஸ்பியனாக ரெஜினா நடித்துள்ள செய்தி பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 'ஏன் இப்டி ரெஜினா, எல்லாம் நல்லா தானே போய்ட்டு இருக்கு' என அவரது ரசிகர்கள் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











