அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ரேகா ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
15 வாரங்கள் நடைபெற்ற இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 105வது நாளில் நிறைவு பெற்றது.

அடுத்தடுத்து வைல்டு கார்டு
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சயில் அடுத்தடுத்து இரண்டு வைல்டு கார்டு என்ட்ரிகள் என களைக்கட்டியது. சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்றது இந்த பிக்பாஸ் சீசன் 4.

நெகட்டிவ் இமேஜ்
சிலருக்கு நெகட்டிவ் இமேஜ்ஜும் சிலருக்கு பாஸிட்டிவ் இமேஜ்ஜும் கிடைத்தது. ஆரிக்கு எதிராக பேசியவர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டனர். ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

விரோதபோக்கில்..
அதிலும் குறிப்பாக அர்ச்சனாவுக்கு ரொம்பவே அதிகமாக நெகட்டிவிட்டி கிடைத்தது. டிவிட்டரில் ரசிகர்கள் அவரை கிழித்த கிழியில் அவர் டிவிட்டரை விட்டே ஓட்டம் பிடித்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த போதும் தனது தவறை உணராமல் விரோத போக்கிலேயே நடந்து கொண்டார்.

கெடுத்ததே அர்ச்சனாதான்
இதனால் இன்னும் அதிகமாக விமர்சிக்கப்பட்டார். பிக்பாஸ் சீசன் 4ஐ கெடுத்ததே அர்ச்சனாதான் என விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் நடிகை ரேகா பிக்பாஸ் ஃபினாலேவில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

பார்க்கவே பிடிக்கவில்லை
அதில் நிஷா, அர்ச்சனா, சோம சேகர் ஆகியோருடன் உள்ளார் ரேகா. இதனை பார்த்த ரசிகர்கள், அர்ச்சனா முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை என கூறி வருகின்றனர். இன்னும் சிலர் லாஸ்லியா பின்னால் நிற்கிறார் என கூறி வருகின்றனர்.

கவினுடன் பேசினாரா?
சிலர் ஷிவானி எங்கே என்றும் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் லாஸ்லியாவும் கவினும் பேசிக் கொண்டார்களா என்றும் கேட்டு வருகின்றனர். ரேகா ஷேர் செய்துள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











