கர்பிணிப் பெண்கள் வீட்டில் நாய் வளர்த்தால் இவ்வளவு நன்மையா!! ரேகா டேன்டேவின் சுவாரசியமான பேட்டி!
சென்னை: ட்விஸ்ட்டி டேய்ல்ஸ் தயாரிப்பில் pet lovers க்கான பாடலாக "Follow Follow me" என்ற பாடல் வெளியாகியுள்ளது.
Recommended Video
ஆங்கில பாடலாக இருந்தாலும் Pet lovers மத்தியில் நல்ல ஆதரவை பெற்றுள்ளது "Follow Follow me" பாடல்.
இந்த பாடல் குறித்தும், பப்பியினால் வரும் நன்மைகள் குறித்தும் க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ளார் ரேகா டேன்டே.

Pet உடன் நெருக்கம்
நாய்களை முத்தமிடுவது சிலருக்கு ஆகாத ஒன்றாக இருக்கிறது அதனை குறித்து கேட்டதற்கு, Pet Owners அப்படி இருக்க வாய்ப்பில்லை எனவும், ஒரு முறை Pet Owner ஆக இருந்து விட்டால் அதனுடன் மிகவும் நெருக்கம் ஏற்பட்டு விடும் என கூறியுள்ளார்.

கர்பிணி பெண்களுக்கு
கர்பிணி பெண்கள் இருக்கும் வீட்டில் நாய் வளர்த்தால் பிறக்க கூடிய குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகமாக இருக்கும் என அறிவியல் பூர்வமான தகவல்களை பகிர்ந்து வியக்க செய்துள்ளார்
ரேகா டேன்டே.

சிறந்த பங்களிப்பு
பேச்சு வராத குழந்தைகள் முதலில் பப்பிகளின் பெயரை சொல்லுவது, மன இறுக்கத்துடன் உள்ள குழந்தைகளுக்காக தனியாக பப்பிகளை வைத்து அதனுடன் நெருக்கமடைய செய்வதும், என ட்விஸ்ட்டி டேய்ல்ஸ் சார்பாக சிறந்த பங்களிப்பை அளித்து வருவதாக ரேகா டேன்டே கூறியுள்ளார்.

இன்னும் பல கேள்விகள்
நம்முடைய நாட்டு நாய்களை அதிகம் வளர்த்து அதனுடைய இனத்தை பெறுக்க வேண்டும் என பிரதமர் கூறியது குறித்த கேள்விக்கு, தனக்கு பப்பி என்றாலே ஒன்று தான் அதில் பாகுபாடு பார்ப்பதில்லை என பேட்டியளித்துள்ளார் ரேகா டேன்டே.
இது மட்டுமன்றி இன்னும் சில சுவாரசியமான செய்திகளை க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் கண்டு களியுங்கள்.


Click it and Unblock the Notifications