புடவை கட்டினாலும் பார்ப்பீங்க..உடையில் ஆபாசம் இல்லை..உங்க பார்வையில் தான் ஆபாசம்..ரேகா நாயர் பேட்டி!
சென்னை: சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் வம்சம், பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் பால கணபதி போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். எந்தவிதமான கருத்தாக இருந்தாலும், அதை பொது இடத்தில் தைரியமாக சொல்லும் இவர், பெண்கள் உடை குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கொடுத்துள்ளார்.
நடிகை ரேகா நாயர், கடந்த ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்து சர்ச்சையில் சிக்கினார். அந்த படத்தில், நடிகை ரேகா நாயர் ஒரு பக்க மார்பகம் தெரியும்படி நடித்திருந்தார். இது போன்று நடிப்பதற்கு தைரியம் வேண்டும் என்று ஒரு தரப்பினர் அவரை பாராட்டினர்கள்

ஆனால், மறுபக்கம், பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் ரேகா நாயரை படுமோசமாக பேசி இருந்தார். பயில்வானின் பேச்சால் டென்ஷனான ரேகா நாயர், அவர் வாக்கிங் செல்லும் திருவான்மியூர் பீச்சில், அவரை மடக்கி, ஏதுவும் தெரியாம இனிமே நீ பேசுனா செருப்பு பிஞ்சிடும் என அவரை அடிக்க பாய்ந்தார். பயில்வானிடம் யாரும் பேச தயங்கும் நிலையில், ரேகா துணிந்து பேசியதை பலரும் பாராட்டினார்கள்.
பெண்களின் ஆடையில் ஆபாசம்: இந்நிலையில், ரேகா நாயர் பெண்களின் ஆடை குறித்து பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஆதி காலத்தில் ஆதாம் ஏவாள் என்ன உடை அணிந்து இருந்தார்கள். இலைகளால் உடலை மறைத்தார்கள். அதன் பிறகு தான் புலித் தோல், மாட்டுத் தோலை உடையாக அணிந்து கொண்டோம். அதற்கு முன் மனிதன் உடை இல்லாமல் தான் இருந்தான். ஆடை என்பதை நீங்கள் ஆபாசமாக நினைத்துக் கொள்கிறீர்கள்.

புடவை கட்டினாலும் ஆபாசம்: தமிழ்நாட்டின் கலாச்சார உடையான புடவை கட்டிலும் மார்பகம், இடுப்பை பார்க்கிறீர்கள். புஷ்பா படத்தில் வரும் பாடல் போல குட்டை பாவாடை போட்டாலும் பாப்பீங்க, நெட்டை பாவாடை போட்டாலும் பாப்பீங்க. இதனால், நாம் பார்க்கும் பார்வையைத் தான் மாற்ற வேண்டுமே தவிர ஆடையை மாற்றுவதில் இல்லை. ஒரு பெண் ஆடையே இல்லாமல் கிடந்தால், தனது வேட்டியை கழட்டி அவளின் மானத்தை காப்பாற்றுபவன் நல்ல மனிதன். அதே போல முழுசா உடலை மூடிக்கொண்டு ஒரு பெண் சென்றாலும், அவளை தொட்டு பார்த்து துன்புறுத்தும் மோசமான ஆணும் இருக்கிறான்.
பார்வையில் தான் ஆபாசம் உள்ளது: இதனால், பல பிரச்சனைகள் ஆபாசமான ஆடையால் தான் நடக்கிறது என்று சொல்லிவிட முடியாது. முதலில் ஆபாசமான உடை என்று ஒன்று இல்லவே இல்லை. தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றுங்கள். எனவே உடையில் ஆபாசம் இல்லை உங்க பார்வையில் தான் ஆபாசம் இருக்கிறது அந்த பார்வையை மாற்றுங்கள் என்று நடிகை ரேகா நாயர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











