Bayilvan Ranganathan - பயில்வான் செத்தால் பட்டாசு வெடிப்பேன் - கொட்டித் தீர்த்த நடிகை
சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) பயில்வான் ரங்கநாதன் இறந்துபோனால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என நடிகை ரேகா நாயர் தெரிவித்திருக்கிறார்.
சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சில படங்களில் நடித்திருக்கிறார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளராக கலந்துகொள்ளும் பயில்வான் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் என ஒருவரை விடாமல் ஏடாகூடமாக கேள்வியை கேட்பவர். இதனால் அவர் என்ன கேள்வி கேட்பாரோ என பலர் முன் யோசனையோடு வருவதுண்டு. சிலர் மட்டும் அவருக்கு தரமான பதிலடிகளை கொடுப்பதுண்டு.

பாலாவிடம் சிக்கிய பயில்வான்: அப்படி ஒருமுறை பிசாசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதன், நீங்கள் பிசாசு என்பதால்தான் கருப்பு உடையில் வந்திருக்கிறீர்களா என பாலாவிடம் வாயை விட, அதற்கு பாலாவோ பிசாசு என்றால் கருப்பு சட்டை போட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பிங்க் கலர் சட்டைக்கூட போட்டிருக்கலாம் என தனக்கேயுரிய பாணியில் பதிலடி கொடுத்தார். அந்த விழாவின்போது பயில்வான் ரங்கநாதன் பிங்க் கலர் சட்டை போட்டிருந்தார்.
பதிலடி கொடுத்த ரேகா நாயர்: இந்தச் சூழலில் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்ததைத் தொடர்ந்து அதுகுறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசினார். அதனையடுத்து திருவான்மியூரில் அவர் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது பயில்வானிடம் சண்டைக்கு சென்றார் ரேகா நாயர். மேலும், அவரை அடிக்கவும் முயன்றார். அதேபோல் நடிகை ராதிகா ஒருமுறை பயில்வான் ரங்கநாதனை செருப்பால் அடித்த சம்பவமும் அரங்கேறியது.

பயில்வானை பஞ்சராக்கிய ராஜன்: சூழல் இப்படி இருக்க பட விழா ஒன்றில் சமீபத்தில் கலந்துகொண்ட கே.ராஜனிடம் வில்லங்கமான கேள்வியை பயில்வான் ரங்கநாதன் கேட்க, கோபமான ராஜன் மேடையில் வைத்தே கடுமையாக திட்டினார். இவ்வளவு பட்ட பிறகும் தனது அவதூறு பேச்சை பயில்வான் ரங்கநாதன் நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து அவ்வாறு வீடியோக்களில் பேசிவருகிறார்.
ரேகா நாயர் பேட்டி: இந்நிலையில் பயில்வான் ரங்கநாதனை திருவான்மியூர் கடற்கரையில் வைத்து செய்த ரேகா நாயர் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நரகாசூரன் இறந்ததை பட்டாசு வெடித்து தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். அதுபோல் பயில்வான் ரங்கநாதன் இறந்தால் நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். ஞாயத்தை சொல்லி சம்பாதிக்கலாம் ஆனால் இல்லாததை சொல்லி சம்பாதிக்கவே கூடாது. நான் வாழும் காலத்தில் இருக்கும் மிக மோசமான மனிதர் அவர்.
நடிகர்களின் நன்றி: நான் திருவான்மியூரில் அவ்வாறு பயில்வானிடம் நடந்துகொண்டதை அடுத்து பெரிய நடிகர்கள் பலர் எனக்கு ஃபோன் செய்து யம்மா உனக்கு கோடி புண்ணியம் என்றார்கள். ஆண் என்ற போர்வையில் திரியும் பிணம். பிணத்துக்குக்கூட மரியாதை கொடுக்கலாம். ஆனால் இதுக்கெல்லாம் கொடுக்க முடியாது. அது ஒரு ஜந்து. இதற்கு மேல் பேசினார் வாய்ல என்னவெல்லாமோ வருத்" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











