Rekha Nair - ஆண்கள் கை வைத்தால் பெண்களை அனுபவிக்க சொன்னேனா?.. ரேகா நாயர் விளக்கம்

சென்னை: Rekha Nair Interview (ரேகா நாயர் பேட்டி) ஆண் ஒருவர் இடுப்பில் கை வைத்தால் பெண் அனுபவிக்க வேண்டும் என்று எந்த அர்த்தத்தில் சொன்னேன் என நடிகை ரேகா நாயர் விளக்கமளித்திருக்கிறார்.

ரேகா நாயர் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தவர். ஒரு சில படங்களில் நடித்த அவர் இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். தனது மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடும் பழக்கம் உடைய ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக குரல் கொடுத்தார். மேலும் அவர் இறந்துவிட்டால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என வெளிப்படையாகவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

Rekha Nair Explains her Controversy Interview about Females

ரேகா நாயர் பேட்டி: இந்தச் சூழலில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில், "பெண்கள் உடைதான் அனைத்துக்குமே காரணம். நான் இப்போது புடவை அணிந்துவந்திருக்கிறேன். நான் கையை தூக்கினால் எனது இடை தெரியத்தான் செய்யும். அதேபோல் பேருந்தில் போகும்போது சில உடைகளை அணிந்து சென்றால் ஒரு ஆண் தொட்டால் அதை ஒரு பெண் அனுபவிக்கத்தான் வேண்டும்" என்றார்.

இப்படி பேசலாமா?: அவரது இந்தப் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி எத்தனை காலம்தான் ஆண்களின் அத்துமீறலுக்கு ஒரு பெண்னின் உடையை காரணம் காட்டுவது. அதுவும் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு ரேகா நாயர் இப்படி பேசியிருக்கவே கூடாது. பயில்வான் ரங்கநாதன் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக சண்டைக்கு சென்ற ரேகா நாயர் இப்படி பேசலாமா என பலர் கேள்வி கேட்டனர்.

ரேகா நாயர் விளக்கம்: இந்நிலையில் தான் எந்த அர்த்தத்தில் அப்படி பேசினேன் என்பது குறித்து ரேகா நாயர் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ஒரு பெண்ணை ஒரு ஆண் ஆசையில் தொடுவதற்கும் வேறு மாதிரி தொடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்தப் பேட்டியில் நான், ஆண் இருக்கக்கூடிய ஒரு பேருந்தில் உடல் பாகம் தெரிவது போல் பெண் ஆடை அணிந்திருக்கிறாள்.

என்ன அர்த்தம்?: அப்படி இருக்கும்பட்சத்தில் ஒரு ஆண் அவளை தெரிந்தோ தெரியாமலோ தொடும்போது அந்த தொடு உணர்வை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அவன் எந்த நோக்கத்தில் செய்கிறான் என்பதை உணர்வதற்காகத்தான் சொன்னேன். உங்களிடம் அவன் தவறாக நடந்தால் கோழி கழுத்தை திருவி போடுவதுபோல் அவனை திருவி போடலாம். ஆனால் நீங்கள் ஆடையை தவறாக அணிவீர்கள். ஆண்களை குற்றம் சொல்வீர்கள். அது தவறு என்று சொன்னதால் என்னை பூமர் ஆண்ட்டி என்று சொன்னார்கள்.

மார்பிலிருந்து சேலை விலகினாலோ அல்லது இடுப்பு தெரிந்தாலோ அதற்கான பாதுகாப்பான மனநிலையில் இருந்தால்தான் பயணிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் வேறு எதிலாவது செல்ல வேண்டும். இந்த அர்த்தத்தில் சொன்னதை சில யூட்யூப் சேனல்கள் தவறாக சித்தரித்து போட்டுவிட்டன" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X