Rekha Nair - அந்த அரசியல் தலைவருடன் ரொம்ப நாள் இருந்துருக்கேன்.. ரேகா நாயர் ஓபன் டாக்

சென்னை: Rekha Nair (ரேகா நாயர்) ஓ.பன்னீர்செல்வம் குறித்து நடிகை ரேகா நாயர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

சின்னத்திரை நாடகத்தில் நடித்து பிறகு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா நாயர். லீட் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு அவர் திரைத்துறையில் அறிமுகமானாலும் பெரும்பாலும் சைடு ரோல்களே அவருக்கு கிடைத்தன. இருப்பினும் கிடைத்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த அவர் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் மிகச்சிறப்பாக நடித்தார்.

 Rekha Nair Open Talk about O Panneerselvam

இரவின் நிழல்: இப்படி துணை கதாபாத்திரங்களில் நடித்தக்கொண்டிருந்த ரேகா நாயருக்கு இரவின் நிழல் ஒளி கொடுத்தது. ஒரே ஷாட்டில் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் சரியாக போகாவிட்டாலும் ரேகா நாயருக்கு பெயர் கிடைத்தது. குறிப்பாக அப்படத்தில் அவர் நிர்வாண காட்சியில் நடித்தது பெரும் விவாதப்பொருள் ஆனது. ஆனால் அந்தக் காட்சி ஆபாசமானதாக இருக்கவில்லை.

பற்றவைத்த பயில்வான்: சூழல் இப்படி இருக்க எப்போதும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து அவதூறாக பேசிவரும் பயில்வான் ரங்கநாதன் இரவின் நிழல் திரைப்படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்ததை விமர்சித்தார். இந்த விவகாரம் முற்ற; அவர் நடைபயிற்சி செல்லும்போது ரேகா நாயர் பயில்வானை மறித்து கேள்வி மேல் கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்கது. ரேகா நாயர் கேட்டதற்கு பயில்வானால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

போட்டுடைக்கும் ரேகா: மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடும் வழக்கம் உடைய ரேகா நாயர் சமீபத்தில் அளித்த பேட்டியில்கூட பயில்வான் ரங்கநாதன் இறந்துபோனால் நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். நான் அவரிடம் அப்படி பேசியதற்கு பல பெரிய நடிகர்களும், நடிகைகளுமேகூட என்னை பாராட்டினார்கள் என பேசியிருந்தார்.

ஓபிஎஸ்: இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து ரேகா நாயர் பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ஓ.பன்னீர்செல்வமுடன் நிறைய நாட்கள் இருந்திருக்கிறேன். அவர் கட்சியிலிருந்து விலகியபோது அவருக்காக தமிழ் எழுதுவதற்கு ஒருவர் மூலம் அழைப்பு வந்தது.

காலை முதல் மாலைவரை: அதனையடுத்து அங்கு பணியில் சேர்ந்தேன். அப்போது பல நாட்கள் காலை சென்றுவிட்டு மாலை வரை அவரது வீட்டில் பணியாற்றிவிட்டு வருவேன். அவர் ரொம்பவே அமைதியான ஒரு மனிதர்" என்றார். அவரது இந்தப் பேட்டியை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்துவருகின்றனர்.

தனுஷ்: முன்னதாக அவர் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில், "தமிழ் சினிமாவில் தனுஷைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் அவரை சந்தித்தபோதுகூட அவரிடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன். நான் சொன்னதுபோல் அவரிடம் பலரும் சொல்லியிருக்கலாம். எனவே நான் சொன்னதை அவர் சாதாரணமாக எடுத்திருக்கலாம். ஆனால் அப்படி சொன்னதற்கான மதிப்பு என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது. எனக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் அவரைத்தான் திருமணம் செய்திருப்பேன்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X