86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா? என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை?
சென்னை: நடிகர் கமல்ஹாசன் எப்போதோ கொடுத்த முத்தம், இப்போது சமூக வலைத்தளங்களில் சர்சையாகி வருகிறது.
Recommended Video
கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரேவதி, ரேகா, டெல்லி கணேஷ், ஶ்ரீவித்யா உட்பட பலர் நடித்திருந்த படம், புன்னகை மன்னன். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
தனது கவிதாலாயா நிறுவனம் சார்பில் கே.பாலசந்தரே தயாரித்திருந்தார். இந்தப் படம் 1986 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

என்ன சத்தம் இந்த நேரம்
படத்தில் காதலர்களான கமல்ஹாசனும் ரேகாவும் தற்கொலைக்கு முயற்சி செய்வார்கள். அருவியின் உச்சியில் இருந்து கீழே விழ முடிவு செய்திருப்பார்கள். அதற்கு முன் நடக்கும் காதல் காட்சியில் என்ன சத்தம் இந்த நேரம் என்ற பாடல் ஒலிக்கும். தற்கொலைக்கு முன் சாகப்போகும் தருவாயில் கமல்ஹாசன் ரேகாவுக்கு திடீரென லிப் லாக் முத்தம் கொடுப்பார்.

இளையராஜா பாடல்கள்
இந்த முத்தம் அந்தக் காட்சிக்கு பொருத்தமாக அமைந்ததாக அப்போது பரபரபப்பாகப் பேசப்பட்டது. பிறகு கீழே விழும் ரேகா, இறந்துவிட, கமல்ஹாசன் மரத்தில் சிக்கிப் பிழைத்து விடுவதுபோல கதை செல்லும். அந்தக் காலகட்டத்தில் நன்றாக ஓடிய படம் இது. படத்தில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல்கள் இன்றும் இனிமையை தரும்.

சொல்லவில்லை
இந்நிலையில் இந்தப் படம் பற்றி சில வருடங்களுக்கு முன், நடிகை ரேகா பேட்டி கொடுத்திருந்தார். அதில் அந்த முத்தக் காட்சி பற்றி கேட்டபோது, அப்போது இயக்குனரோ, கமல்ஹாசனோ எனக்கு முத்தம் கொடுப்பது போல காட்சியை எடுக்கப் போகிறோம் என்று சொல்லவில்லை. என்னிடம் சொல்லாமல் திடீரெனதான் கமல்ஹாசன் முத்தம் கொடுத்தார் என்று கூறி இருந்தார்.

பரபரப்பான விவாதம்
இந்நிலையில் இந்தப் பேட்டியை, இப்போது எடுத்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர். திங்கட்கிழமையில் இருந்து இது தொடர்கிறது. இதில் கமல்ஹாசன் இப்படி சொல்லாமல் முத்தம் கொடுத்தது சரிதானா? என்று பரபரப்பாக விவாதித்து வருகின்றனர்.

பேச விரும்பவில்லை
இதுபற்றி நடிகை ரேகா கூறும்போது, 'அது எப்போதோ நான் கொடுத்தப் பேட்டி. இப்போது அது ஏன் பிரபலமாகி வருகிறது என்று தெரியவில்லை. என்னிடம் அனுமதி கேட்காமல் எடுக்கப்பட்ட காட்சிதான் அது. அந்தப் படத்துக்காக எடுக்கப்பட்டது. அது படத்துக்கு பயன்பட்டது. அவ்வளவுதான். அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை. படங்கள் மற்றும் வெப்சீரியஸ்களில் பிசியாக இருக்கிறேன்' என்றார்


Click it and Unblock the Notifications











