பரவியது கொரோனா.. பிரபல நடிகையின் பங்களாவுக்கு சீல்.. எச்சரிக்கை போஸ்டரால் ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பை: கொரோனா தொற்று பரவியதை அடுத்து பிரபல நடிகையின் பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்தி நடிகை ரேகா. பழம்பெரும் ஹீரோ ஜெமினிகணேசனின் மகளான இவர், குழந்தை நட்சத்திரமாக நடிப்பை தொடங்கியவர்.
பாலிவுட்டில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த ரேகா, சுமார் 180 படங்கள் வரை நடித்துள்ளார்.

பிரமாண்ட பங்களா
அமிதாப் உட்பட பல முன்னணி இந்தி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். உம்ராவோ ஜான் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் மும்பையில் பாந்த்ராவில் பிரமாண்ட பங்களாவில் வசித்து வருகிறார். இவரது பங்களாவுக்கு வெளியே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீடு இது என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பங்களாவுக்கு சீல்
நடிகை ரேகாவுக்கோ, அவரது வீட்டில் உள்ள யாருக்குமோ, கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. பின்னர் விசாரித்தபோது நடிகை ரேகாவின் வீட்டில் செக்யூரிட்டியாக பணியாற்றியவருக்கு கொரோனா தொற்றுப் பரவியதை அடுத்து, அவர் பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

கொரோனா பாதிப்பு
மும்பை மாநகராட்சி அதிகாரிகள், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். நடிகை ரேகாவின் வீட்டில் இரண்டு செக்யூரிட்டிகள் பணியாற்றுகின்றனர். அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரது வீட்டில் உள்ள அனைவருக்கும் மும்பை மாநகராட்சி மருத்துவர்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தனியாக பரிசோதனை
நடிகை ரேகா அவர்களிடம் பரிசோதனை செய்துகொள்ளவில்லை. தனியாக பரிசோதனை செய்து அறிக்கையை மாநகராட்சிக்கு சமர்பிப்பதாகத் தெரிவித்துவிட்டாராம். அதோடு பங்களா முழுவதும் சீல் வைக்கவில்லை என்றும் செக்யூரிட்டிகள் இருந்த அறை மட்டுமே சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video

நடிகர் அமிதாப்பச்சன்
ஏற்கனவே, போனிகபூர் அலுவலக ஊழியர், நடிகர் ஆமீர்கான் வீட்டில் பணியாற்றியவர், கரண் ஜோஹர் அலுவல பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருந்தது. இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











