கே ஜி எஃப் 2 குறித்த தேதியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல்!

பெங்களூரு : கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் இப்பொழுது இந்திய அளவில் பிரபலமான நடிகராக யஷ் உள்ளார்.

கே ஜி எஃப் பாகம்-1 மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் அதைவிட பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இன்னும் ஓரிரு மாதத்தில் கேஜிஎஃப் பாகம் 2 வெளியாகும் என தேதியுடன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய அளவில்

இந்திய அளவில்

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான கே ஜி எஃப் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் கதாநாயகனாக நடித்திருக்க யஷ் இப்பொழுது இந்திய அளவில் அதிகம் கவனிக்கப்படும் முக்கிய நடிகராக மாறியுள்ளார்.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

வெளியான அனைத்து மொழிகளிலும் வசூலை வாரி குவித்த கே ஜி எஃப் இரண்டாம் பாகம் இப்பொழுது முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனை முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார். ரவீனா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

ஜூலை 16ஆம் தேதி

ஜூலை 16ஆம் தேதி

நடிகர் யஷின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் டீஸர் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருக்கும் நிலையில் கே ஜி எஃப் 2 வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது

கொரோனா முதல் அலை சற்று ஓயத்தொடங்கி இப்போது இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இந்தநிலை இன்னும் 2 முதல் 3 மாதங்கள் வரை நீடிக்கும் படத்தை ரிலீஸ் செய்தால் வசூல் மிகப்பெரிய அடிவாங்கும் என்பதால் ஜூலை 16ஆம் தேதி வெளியாக இருந்த கே ஜி எஃப் 2 ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பது பற்றி படக்குழு ஆலோசித்து வருகிறது என செய்திகள் கசிந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X