சிவகார்த்திகேயன், சூரி தந்த டபுள் ட்ரீட்.. ஒரே நாளில் இப்படியொரு சர்ப்ரைஸா.. அசத்திட்டீங்க போங்க

சென்னை: அமரன்படத்திற்கு சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இருப்பினும் சிக்கந்தர் பட தோல்வியில் இருக்கும் முருகதாஸ் மதராஸியை பெரிதாக நம்பியிருக்கிறார். இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வந்திருக்கும் நிலையில், தற்போது ஹீரோவாக கலக்கி வரும் காமெடி நடிகரின் படம் குறித்த முக்கிய அப்டேட்டை தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23ஆவது படமான மதராஸி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தில் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை பட நடிகர் சபீர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் 40ஆவது பிறந்தநாளில் மதராஸி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ மற்றும் படத்தின் டைட்டில் கார்டும் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால், சிவகார்த்திகேயன் படத்தில் இடம்பெறும் தலைப்புகள் பழைய படங்கள் தலைப்புகள் என விமர்சகர்கள் தெரிவித்தனர்.

release-date-of-sivakarthikeyan-and-sooris-films-announced

7 பழைய படங்களின் பெயர்: சிவகார்த்திகேயன் நடித்த படங்களான காக்கி சட்டை, எதிர்நீச்சல், வேலைக்காரன், அமரன், என அனைத்தும் முந்தைய படங்களில் டைட்டிலாக இருக்கின்றன. இந்த பெயரில் வந்த படங்கள் அனைத்து சிவகார்த்திகேயனுக்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்திருக்கிறது. தற்போது அந்த வரிசையில், மதராஸி, பராசக்தி படங்களும் பழைய படங்களின் பெயர்களின் லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறது. கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் கரியரில் மிகப்பெரிய வசூலை ஈட்டிய படமாக இருக்கிறது. பழைய படங்களின் பெயரால் கிடைத்த வெற்றியால் அதையே தொடர்வதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

சிக்கந்தர் தோல்வி: மதராஸி படத்தை இயக்கி கொண்டிருந்தபோதே சல்மான் கான் படத்தில் பிஸியாக இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியான சிக்கந்தர் படம் பாக்ஸ் ஆஃபிசில் மிகப்பெரிய டிஸாஸ்டரை சந்தித்தது. சல்மான்கான் சினிமா கரியரிலேயே மிக மோசமான படமாக அமைந்தது. ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், மதராஸி படத்தை எதிர்பார்த்திருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில், மதராஸி படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற ஆவல் இருந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு இப்படம் வெற்றிப்படமாக அமையுமா என்பது சந்தேகமாக இருக்கிறதாம். காரணம் சிக்கந்தர் பட தோல்வியால் ஏ.ஆர்.முருகதாஸும் கலக்கமடைந்திருக்கிறார். எக்ஸ் தளத்தை பிரைவேட்டாகவும் மாத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

release-date-of-sivakarthikeyan-and-sooris-films-announced

மதராஸி ரிலீஸ் எப்போது?: இந்நிலையில், மதராஸி படம் குறித்த முக்கிய அறிவிப்பை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்திருக்கிறார். ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் நிலையில், மதராஸி படம் குறித்த ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமரன் படத்தை போன்று மதராஸியும் வசூல் வேட்டை நடத்தும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.

release-date-of-sivakarthikeyan-and-sooris-films-announced

சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த நிலையில், அவரது ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர். அதேபோன்று நடிகர் சூரியும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறார். சினிமாவில் சிவகார்த்திகேயன் - சூரியும் அண்ணனும் தம்பியுமாக இருக்கின்றனர். பாசம் வைப்பதில் இவர்களை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை என்ற அளவிற்கு இருக்கின்றனர். அண்மையில் சூரி நடித்த மாமன் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த சிவகார்த்திகேயன் சூரியை சர்ப்ரைஸ் செய்தார். பின்பு படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானது. சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படம் குறித்த ரிலீஸ் தேதி வெளியான இதே நாளில் சூரி படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகியிருக்கிறது.

மாமன் ரிலீஸ் தேதி: சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரன் ஆகியோர் நடித்திருக்கும் மாமன் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் புத்தாண்டு தினமான இன்று மாமன் படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இதனால், சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் ரசிகர்களும் இரண்டு படங்களையும் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X