ட்விட்டரில் ட்ரென்டாகும் #ReleasePerarivalan ஹேஷ்டேக்.. பார்த்திபன், விஜய் சேதுபதி திடீர் கோரிக்கை!

By

சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று டிவிட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

Perarivalan-க்காக குரல் கொடுக்கும் சினிமா பிரபலங்கள் | Tamil Filmibeat

அவரை விடுதலைச் செய்யக் கோரி, விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ஏற்க முடியாது

ஏற்க முடியாது

அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பேரறிவாளன் கருணை மனுவை 2 ஆண்டுகளாக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று கூறியது.

#ReleasePerarivalan

#ReleasePerarivalan

ஆளுநர், சட்டப்படியான முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டுமென கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இந்நிலையில், #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. விஜய் சேதுபதி, பார்த்திபன், சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொற்பாதம் பிடிக்காத

பார்த்திபனின் ட்விட்டில், அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக, கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால், அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன் என்று கூறியுள்ளார்.

அதிகாரியின் வாக்குமூலம்

போலீஸ் அதிகாரியின் வீடியோவை வெளியிட்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், 'தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள வீடியோவில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து ஆளுநர், பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X