twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவது சினிமாத்துறைக்கு ஆரோக்கியமாக இருக்காது.. அமைச்சர் கடம்பூர் ராஜூ!

    |

    சென்னை: ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவது தொடர்ந்தால் ஆரோக்கியமாக இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸின் மிரட்டலால் நாடு முழுக்க கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

    இதனால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்கள் சிலர், நல்ல விலை, மற்றும் பண நெருக்கடி உள்ளிட்ட காரணங்கள் OTT எனப்படும் ஆன்லைன் ஆப்களில் படத்தை ரிலீஸ் செய்து வருகின்றனர்.

    கேக் நல்லாதான் இருக்கு.. அந்த மிடில் ஃபிங்கர் கிளிக் தான் ஓவர்...கலாய்த்த நெட்டிசன் !கேக் நல்லாதான் இருக்கு.. அந்த மிடில் ஃபிங்கர் கிளிக் தான் ஓவர்...கலாய்த்த நெட்டிசன் !

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    அண்மையில் ஜோதிகா நடிப்பில், 2டி எண்டெர்டெயின்மென்ட் தயாரித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT தளமான அமேஸான் ஆப்பில் வெளியானது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோஸ்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இன்னும் பல படங்கள்

    இன்னும் பல படங்கள்

    இருப்பினும் எதிர்ப்பையும் மீறி அந்தப் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனிடையே பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம், மற்றும் சூர்யாவின் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் ஆன்லைனில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

    ஆரோக்கியமாக இருக்காது

    ஆரோக்கியமாக இருக்காது

    இந்நிலையில் ஓடிடி தளத்தில் படங்கள் ரிலீஸ் செய்யப்படுவது குறித்து செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஆன்லைனில் திரைப்படங்களை ரிலீஸ் செய்வது ஆரோக்கியமானது இல்லை என கூறியிருக்கிறார்.

    சிறப்பாக இருக்காது

    சிறப்பாக இருக்காது

    மேலும் பொது முடக்கத்தின் போது நஷ்டத்தை ஈடுகட்ட தற்காலிகமாக வெளியிட்டால் பரவாயில்லை என்றும் ஆனால் ஆன்லைனில் படங்களை வெளியிடுவது தொடர்ந்தால் அது சினிமாத்துறைக்கு சிறப்பாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    God Man Webseries வெளியாகுமா? தொடரும் சர்ச்சை Daniel Balaji, Gayathri Raghuram
    பலரும் பாதிப்பார்கள்

    பலரும் பாதிப்பார்கள்

    திரைப்படங்களை ஆன்லைனில் ரிலீஸ் செய்வதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    English summary
    Releasing movies on OTT platform will not be healthy says Minister Kadambur Raju. He also says, it is ok during lockdown. But if it is continues it will not be good to cinema industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X