மலையாளத்தில் ரிலையன்ஸ்!

மம்முட்டி நடிக்க, ஷாஜி காருண் இயக்க உருவாகும் படம் குட்டி ஷ்ராங்கு. இப்படத்தை தயாரிக்க ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் முன்வந்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் முழுக்க முழுக்க இப்படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளது. இப்படத்திற்காக முழுமையாக கால்ஷீட்களைக் கொடுத்துள்ளாராம் மம்முட்டி.
படத்தில் மூன்று ஹீரோயின்கள். அவர்களில் ஒருவர் இலங்கைப் பெண் என்கிறார்கள். மற்றவர்கள் பாலிவுட் நாயகிகளாம்.
மம்முட்டி மூன்று தீவுகளுக்குப் போகிறார். ஒவ்வொரு தீவிலும் ஒரு அழகியை சந்திக்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாம்.
மலையாளத்தில் தயாரிக்கப்படும் இப்படத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் உலகெங்கும் திரையிடப் போகிறார்களாம்.
ஜூலையில் படத்தை முடித்து செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடத் திட்டமிட்டுள்ளாராம் ஷாஜி காருண்.


Click it and Unblock the Notifications











