ராம் சரண் மகளுக்கு முகேஷ் அம்பானி கொடுத்த விலை உயர்ந்த கிப்ட்.. எத்தனை கோடி தெரியுமா?

ஹைதராபாத்: நடிகர் ராம் சரண் மகளின் பெயர் சூட்டுவிழாவில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி விலை உயர்ந்த பொருளை பரிசாக கொடுத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரண். இவரும் தந்தையைப் போல தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

நடிகர் ராம் சரண் ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட நடிகராக இருக்கிறார்.

Reliance Industries mukesh ambani gifted a golden cradle to the newborn daughter of Ram Charan and Upasana

ராம்சரண், உபாசனா: ராம்சரண் மற்றும் உபாசனாவுக்கு 2012ம் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 11 ஆண்டுகள் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொண்டு வந்தார்கள். குழந்தை இல்லை என்று பல விமர்சனங்களை ராம்சரணும் அவரது மனைவியும் சந்தித்து வந்தனர்.

மகிழ்ச்சியான செய்தி: இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் உபாசனா கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ராம்சரணின் தந்தை சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

வளைகாப்பு: இதையடுத்து, கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படத்தை உபாசனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, ஜூன் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அழகிய பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து குழந்தையை பார்க்க அல்லு அர்ஜுன், நிஹாரிகா, பவன் கல்யாண் உள்ளிட்ட பிரபலங்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

விலை உயர்த்த பரிசு: இந்நிலையில் இன்று குழந்தைக்கு பெயர் சூட்டு விழா பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், இந்த விழாவில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி தம்பதி ராம்சரனின் மகளுக்கு மிகவும் விலையுயர்ந்த தங்கத்தினால் செய்யப்பட்ட தொட்டிலை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை மட்டும், ஒரு கோடி 20 லட்சம் ரூபாய் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X