நடிகர் சங்க கட்டடம் கட்ட விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்: ஹைகோர்ட்

By Siva

சென்னை: நடிகர் சங்க கட்டடம் கட்ட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படுவதாக ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Relief for Nadigar Sangam functionaries

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நடிகர் சங்க கட்டடம் கட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு வழக்கறிஞர் ஆணையர் கே. இளங்கோவனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு எதுவும் செய்யப்படவில்லை என்று அறிக்கை அளித்தார். இந்நிலையில் நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியுள்ளது உயர் நீதிமன்றம்.

இடைக்கால தடையை நீக்கி வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X