சிம்புவா.. சிவகார்த்திகேயனா.. அல்லு அர்ஜுனின் அந்த சூப்பர் ஹிட் பட ரீமேக்குக்கு நடக்குது போட்டி!

சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசான அலா வைகுந்தபுறமுலோ திரைப்படம் 200 கோடி வசூலை தாண்டி மெகா பிளாக்பஸ்டர் அடித்துள்ளது.

Recommended Video

Pushpa First Look | Stylish Star Allu Arjun 37th Birthday

அந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழில் அந்த படத்தை ரீமேக் செய்ய சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அல்லு அர்ஜுன் படம்

அல்லு அர்ஜுன் படம்

திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் தபு, ஜெயராம், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் அலா வைகுந்தபுறமுலோ. மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கெவ்வரு படம் வசூலில் வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாகவும், தெலுங்கு ரசிகர்களையும் கொள்ளைக் கொண்டது அல்லு அர்ஜுன் படம் தான்.

270 கோடி வசூல்

270 கோடி வசூல்

பணக்கார வீட்டுப் பிள்ளையான அல்லு அர்ஜுன் ஏழை வீட்டிலும், முரளி ஷர்மாவின் மகன் சுஷாந்த் ஜெயராம் வீட்டிலும் வளரும் கதை தான் அலா வைகுந்தபுறமுலோ. ஆனால், எப்படியோ ஹீரோ கடைசியில் பணக்கார வீட்டு பையனாக மாறிவிடுவான் என பலரும் கெஸ் செய்ய, கிளைமேக்ஸ் ட்விஸ்டில் இயக்குநர் செம ஸ்கோர் செய்து இருந்ததே இந்த படம் 270 கோடி வசூலை ஈட்ட உதவியது.

கடும் போட்டி

கடும் போட்டி

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான இந்த படம் இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவி வருகிறது. தமிழில் இந்த படத்தை விஜய் ரீமேக் செய்வாரா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வந்த நிலையில், சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

அலா வைகுந்தபுறமுலோ படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பொருத்தமாக இருப்பார் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில், சிவகார்த்திகேயன் தரப்பும் இந்த படத்தை ரீமேக் செய்ய ஆர்வமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டாக்டர், அயலான் என பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன் எப்படி இந்த படத்தை பண்ணுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சிம்பு தான்

சிம்பு தான்

அலா வைகுந்தபுறமுலோ படத்தின் தமிழ் ரீமேக்கை வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் படங்களை இயக்கிய விஜய் சந்தர் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். எல்லாமே சுமூகமாக முடியும் நிலையில், சிம்புவை வைத்து அந்த படத்தை இயக்க விஜய் சந்தர் முடிவு செய்துள்ளார். மாநாடு படத்தைத் தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

என்ன ஆகும்?

என்ன ஆகும்?

டோலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஆன அந்த படத்தை தமிழில் சிவகார்த்திகேயன் அல்லது சிம்பு என இருவரில் யாரை வைத்து எடுத்தாலும், 200 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் சாத்தியம் ஆவது கடினமே என்கின்றனர் சினிமா நிபுணர்கள். ஏற்கனவே பவன் கல்யாணின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்து வந்தா ராஜாவாதான் படத்தில் சிம்பு நடித்திருந்தார். ஆனால், அந்த படம் படு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X