twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரீமேக் ஆகும் ஓ மை கடவுளே...மற்ற மொழிகளில் தடம் பதிக்க வாய்ப்பு தேடும் டைரக்டர்

    |

    சென்னை : டைரக்டர் அஸ்வத் மாரிமுத்து, கடந்த ஆண்டு இயக்கிய காதல் படம், ஓ மை கடவுளே. அசோக் செல்வன் - ரித்திகா சிங் நடித்த இப்படம் தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

    இது பற்றி அஸ்வத் கூறுகையில், விரைவில் தெலுங்கு ரீமேக் சூட்டிங் துவக்கப்பட உள்ளது. இதில் விஸ்வாக் சென் ஹீரோவாக நடிக்கிறார். அவர் அழுத்தமான ரோல்களில் நடித்து வருகிறார். இப்படம் அவருக்கு நல்ல மாற்றமாக இருக்கும். பக்கத்து வீட்டு பையன் உணர்வு அனைவருக்கும் வரும்.

    Remaking OMK is an opportunity for me to get introduced in every industry: Ashwath

    தமிழில் பணியாற்றிய இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளர் விது அய்யனாவே தெலுங்கிலும் பணியாற்ற உள்ளனர். மற்ற வேடங்களில் நடிப்பவர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் விரைவில் முடிவு செய்யப்படுவார்கள்.

    தமிழில் விஜய் சேதுபதி நடித்த கடவுள் வேடத்தில் தெலுங்கில் பெரிய ஸ்டாரை நடிக்க வைக்க உள்ளோம். தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்கள் செய்ய உள்ளோம். வாணி போஜன் நடித்த மீரா கேரக்டரிலும் மாற்றம் கொண்டு வர உள்ளோம்.

    பிக்பாஸ் பிரபலத்துடன் காதலில் லயிக்கும் வாணி ராணி சீரியல் நடிகை? தீயாய் பரவும் போட்டோஸ்! பிக்பாஸ் பிரபலத்துடன் காதலில் லயிக்கும் வாணி ராணி சீரியல் நடிகை? தீயாய் பரவும் போட்டோஸ்!

    தெலுங்கை முடித்த பிறகு இந்தி படத்தின் பணிகளை துவக்குவேன். விரைவில் இதன் வேலைகள் முடியாவிட்டால் தமிழில் ஒரு படம் எடுத்து விட்டு, இந்தி ரீமேக் பணிகளை துவக்குவேன். மற்ற மொழிகளில் என்னை அறிமுகம் செய்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதால் தான் புதிய படத்தை இயக்குவதற்கு பதிலாக 2 மொழிகளில் ரீமேக் செய்கிறேன் என்றார்.

    English summary
    Remaking OMK is an opportunity for me to get introduced in every industry says Ashwath
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X