ரகுவரன் உடல் மட்டுமல்ல.. குரல்கூட நடிக்கும்..ரகுவரனின் 16ம் ஆண்டு நினைவு தினம்!

சென்னை: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் ரகுவரன். 1982ல் வெளிவந்த ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். குணச்சித்திரம், வில்லன் என பலவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்த ரகுவரனின் 16ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

ஹீரோ, வில்லன், குணசித்திர நடிகர் எனப் பல கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த, நடிகர் ரகுவரன் மறைந்து விட்டாலும் அவர் நடித்த படங்களில் மூலம் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நாளில் அவர் குறித்த சில சுவாரசியமான தகவலை இப்போது பார்க்கலாம்.

Remembering the late actor Raghuvaran on his 16th memorial day

நடிகர் ரகுவரன்: தன்னிகரில்லா நடிகரான ரகுவரன், 1990ம் ஆண்டு புரியாத புதிர் படத்தில், ஐ நோ ஐ நோ என பல மாடுலேஷனில் சொல்லி ரசிகர்களிடம் அப்ளாசை வாங்கி இருப்பார். அந்த படம் பார்த்த ரசிகர்கள் என்ன மனுஷய்யா என்று சொல்லும் அவளவுக்கு அந்த வசனம் இடம் பெற்று இருக்கும். இப்படி படத்திற்கு படம் வித்தியாசத்தை காட்டி அசத்திய ரகுவரன், பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாக நடித்து அனைவரையும் திகைக்க வைத்தார்.

மார்க் ஆண்டனி: பாட்ஷா படத்தில் ரகுவரன் நடித்தது குறித்து இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா என்ன சொல்கிறார் தெரியுமா? அந்த கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் முதல் டோலிவுட் வரை பல நடிகர்களை தேடி அலைந்த போது, அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தவர் ரகுவரன் மட்டும் தான். ஏன்னா, பாட்ஷா பட வில்லனுக்கு உடல் பலம் தேவையில்லை, புத்தி கூர்மையான வில்லன் தான் தேவை, ஏன் என்றால் படத்தின் ஆணி வேறே மார்க் ஆண்டனி தான். இந்த கேரக்டருக்கு ரகுவரன் செட்டாவாருனு அவரை அணுகினோம் அவரும் ஒகே சொல்லிவிட்டார்.

குரலும் நடிக்கும்: ஆனால், எதிர்பார்த்ததை விட ரகுவரன் சிறப்பாக நடித்திருந்தார். ரகுவரனும் ரஜினியும் பேசும் வசனம் வரும் போது தியேட்டரில் கைத்தட்டல் அள்ளியது. படம் எடுக்கும் போது நான் என்ன நினைச்சு படத்தை எடுத்தேனோ அதைவிட அதிகமான வரவேற்பு படத்திற்கு கிடைத்தது. ரகுவரன் எப்போதுமே தனது பெஸ்டை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார், புத்திசாலியான நடிகரும் கூட, அதிகமா நடிக்காமலே உடல் மொழியால் அசத்திவிடுவார். ரகுவரனின் உடல் மட்டுமில்ல அவரின் குரலும் கூட நடிக்கும் என்று பாட்ஷா பட இயக்குநர் ரகுவரன் குறித்து பல பேட்டிகளில் பாராட்டி கூறியுள்ளார்.

பிரிந்தனர்: நடிகர் ரகுவரன், நடிகை ரோகிணியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ரிஷி என்ற மகன் இருக்கும் நிலையில், இருவரும் 2004ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் தனியாக வசித்து வந்த ரகுவரன் 2008ம் ஆண்டு உயிரிழந்தார். இன்று ரகுவரனின் 16ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பலர் அவரை நினைவு குறித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X