அரை நிர்வாணத்தில் வாயில் சிகரெட்டுடன் ரெமோ பட நடிகர்!
சென்னை : மலையாளத்தில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அன்சன் பால் தமிழில் ரெமோ படத்தின் மூலம் அறிமுகமானார்.
சோலோ, தம்பி,90ml,உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அரை நிர்வாணத்தில் கட்டுமஸ்தான உடம்பை காட்டிக்கொண்டு வாயில் சிகரெட்டுடன் செம கெத்தாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளம் ரசிகைகளின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.

இரண்டாவது ஹீரோவாக
சிவகார்த்திகேயன் முதல் முறையாக பெண் வேடத்தில் நடித்திருந்த ரெமோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படம் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் ஹிட்டடித்தது. இதில் இரண்டாவது ஹீரோவாக இளம் மலையாள நடிகர் அன்சன் பால் நடித்திருப்பார்.

வில்லன் கலந்த
மலையாளத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள இவருக்கு ஏற்கனவே பெண் ரசிகர்கள் கூட்டம் எக்கச்சக்கமாக இருக்க தமிழில் ரெமோ திரைப்படத்தில் வில்லன் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

மிகப்பெரிய பெயரை
ரெமோ இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்ததை தொடர்ந்து சோலோ ,தம்பி மற்றும் 90ml உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானார். இப்பொழுது மழையில் நனைகிறேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வாயில் சிகரெட்டுடன்
தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் இவருக்கு ஏற்கனவே பெண் ரசிகர்கள் கூட்டம் எக்கச்சக்கமாக இருக்க இப்பொழுது அரை நிர்வாணத்தில் வாயில் புகைத்தல் சிகரெட்டுடன் செம கெத்தாக கட்டுமஸ்தான உடம்பை காட்டிக்கொண்டு பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை வெளியிட்டு இளம் பெண்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











