Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பட வாய்ப்புக்காக படுக்கை பழக்கம் உண்டு, வெட்கமாக இருக்கிறது: ரம்யா நம்பீசன்
Recommended Video
கோவை: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என்று நான் சொல்லவில்லை என நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளனர்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர். தெலுங்கு திரையுலகில் ஸ்ரீ ரெட்டி பெரும் புயலையே கிளப்பிக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ரம்யா நம்பீசன் கூறியிருப்பதாவது,
சக நடிகைகள்
திரையுலகில் உள்ள சில மோசமான விஷயங்கள் பற்றி என் சக நடிகைகளும், தோழிகளும் பேசியதை நான் மறுக்கப் போவது இல்லை. அதிர்ஷ்டவசமாக நான் அந்த தொல்லைக்கு ஆளாகவில்லை.
பட வாய்ப்பு
நான் என்ன செய்கிறேன் என்பதில் தெளிவாக உள்ளேன். எனக்கு ஏதாவது பிடிக்காவிட்டால் முடியாது என்று சொல்லும் பழக்கம் உள்ளது. ஆனால் என் தோழிகள் இந்த பிரச்சனைகளை சந்தித்துள்ளனர் என்பதை நினைக்கும்போது வெட்கமாக உள்ளது.
எனக்கு இல்லை
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் எனக்கு அப்படி நடக்கவில்லை என்கிறேன். இந்த பிரச்சனையை தீர்க்க இது குறித்து பேச வேண்டும்.
அனைத்து துறை
படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் உள்ளது. பெண்கள் தைரியமாக இருந்து அது பற்றி பேச வேண்டும் என்கிறார் ரம்யா நம்பீசன்.