அரவிந்த்சாமி லீட் ரோலில் நடிக்கும் ரெண்டகம்…படக்குழு வெளியிட்ட சுவாரசியத் தகவல் !

சென்னை : அரவிந்த் சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ரெண்டகம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகும் இத்திரைப்படத்தை டி.பி.பெலினி இயக்குகிறார்.\

25 வருடங்கள் கழித்து அரவிந்த்சாமி இப்படத்தின் மூலம் மலையாளத்தில் ரீ என்ட்ரியாக உள்ளார்.

ரெண்டகம்

ரெண்டகம்

டொவினோ தாமஸ் நடித்த 'தீவண்டி' என்கிற வெற்றி படத்தை இயக்கிய டிபி பெலினி ரெண்டகம் திரைப்படத்தை இயக்கி உள்ளார். நடிகர் ஆர்யா பங்குதாரராக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. அரவிந்த்சாமி, குஞ்சக்கோ போபன் நடிக்கும் இப்படத்திற்கு தமிழில் ரெண்டகம் என்றும் மலையாளத்தில் ஒட்டு என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.

செகண்ட் இன்னிங்ஸ்

செகண்ட் இன்னிங்ஸ்

தளபதி, ரோஜா, பம்பாய் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து இளம் பெண்களில் கனவு நாயகனான இருந்த அரவிந்த் சாமி இத்திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளாக சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த அரவிந்த் சாமி தனிஒருவன் திரைப்படத்திற்கு பின்பு இரண்டாவது இன்னிங்ஸிலும் வெற்றிநடை போட்டு வருகிறார். தமிழிலேயே பல படங்களில் நடித்துவரும் அரவிந்த்சாமி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில்

தமிழில்

மலையாள சினிமாவின் சாக்லேட் ஹீரோ என இப்போதும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும், நடிகர் குஞ்சாக்கோ போபன். அஜித்தின் மனைவி ஷாலினி கதாநாயகியாக அறிமுகமான அனியத்தி பிறாவு படத்தின் மூலம் தான் இவரும் மலையாள திரையுலகில் அறிமுகமானார். மலையாள நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் நுழைந்து ரசிகர்களை வசப்படுத்தி வரும் நிலையில், முதன்முறையாக ரெண்டகம் என்கிற படத்தின் மூலம் குஞ்சாக்கோ போபனும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். இவர், மலையாளத்தில் சமீபத்தில் வெளியான நிழல் திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார்.

டீசர்

டீசர்

ரெண்டகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் டீசரை நாளை மாலை 5 மணிக்கு நடிகர் கார்த்தி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான போஸ்டரும் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X