ரேனிகுண்டா, பில்லா பட நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மரணம்.. திரைத்துறையினர் அதிர்ச்சி!
சென்னை: நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் மரணமடைந்த தகவல் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video

தமிழ்த் திரையுலகில் நடிகராக வலம் வந்தவர் கார்த்தி என்கிற தீப்பெட்டி கணேசன். இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.
'ரேணிகுண்டா', 'பில்லா 2', 'கண்ணே கலைமானே' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தீப்பெட்டி கணேசன் மரணம்
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தீப்பெட்டி கணேசன், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலமாகியுள்ளார்.

இதய அஞ்சலி கணேசா
இந்த தகவலை இயக்குநர் சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறை இதய அஞ்சலி கணேசா.. என குறிப்பிட்டுள்ளார்.

அஜித்திடம் உதவி கேட்டு
ஊரடங்கு காலத்தின் போது நடிகர் தீப்பெட்டி கணேசன் கடும் வறுமையால் பாதிக்கப்பட்டார். தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் அஜித்துக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோவும் வெளியிட்டார்.

லாரன்ஸ் உதவி
இதனை பார்த்த பாடலாசிரியர் சினேகன், தீப்பெட்டி கணேசனின் வீட்டிற்கே சென்று உதவினார். இதேபோல் நடிகர் லாரன்ஸும் உங்கள் குழந்தைகளின் கல்விக்கு என்னால் ஆன உதவிகளை செய்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

நன்றி கூறிய கணேசன்
தீப்பெட்டி கணேசனின் வறுமை நிலையை அறிந்த நடிகர் சங்கத்தின் விஷால் தரப்பு அவருக்கு அரசி, மளிகைப் பொருட்கள் வழங்கி உதவி செய்தது. இதற்கு நன்றி தெரிவித்து வீடியோவும் வெளியிட்டார் தீப்பெட்டி கணேசன்.

திரைத்துறையினர் அதிர்ச்சி
இந்நிலையில் இன்று உடல்நலக்குறைவால் திடீரென காலமாகியுள்ளார் தீப்பெட்டி கணேசன். அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











