ரேனிகுண்டா 2 ஃபர்ஸ்ட் லுக்.. விஜய் சேதுபதி வெளியிட்ட அதிரடி போஸ்டர்.. எகிறும் எதிர்பார்ப்பு

சென்னை: 'ரேனிகுண்டா' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்திருந்தாலும், அந்த படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக வித்தியாசமான கதைக்களம், யதார்த்தமான காட்சிகள் மற்றும் புதுமுக நடிகர்களின் எதார்த்த நடிப்பு ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. இந்த நிலையில், தற்போது "ரேனிகுண்டா 2" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான "ரேனிகுண்டா" திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி கவனம் பெற்றது. ஜானி, சஞ்சனா சிங், தீப்பெட்டி கணேசன் மற்றும் சனுஷா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருந்தார்.

சனுஷாவின் திரைப்பயணம்: இந்த படத்தின் மூலம் நடிகை சனுஷா தமிழ் ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அவர், பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். குறிப்பாக தமிழ் சினிமாவில் பல்வேறு அழுத்தமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

Renigunta 2 First Look Unveiled by Vijay Sethupathi Fans Excited for the Sequel

இப்படி இருக்கையில், இயக்குநர் பன்னீர்செல்வம் தற்போது "ரேனிகுண்டா 2" திரைப்படத்தை இயக்கி, அவரே தயாரித்தும் வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியான நிலையில், ஜூன் 6ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கங்களில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

'கருப்பன்' படத்தின் நட்பு: ஏற்கனவே விஜய் சேதுபதி, இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியான "கருப்பன்" திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த பழைய நட்பின் அடிப்படையிலேயே தற்போது "ரேனிகுண்டா 2" படக்குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்களை பிரபல பாடலாசிரியர்களான யுகபாரதி மற்றும் விவேகா ஆகியோர் எழுதி வருகின்றனர். மேலும், இந்த படத்தின் மூலம் தீப்ஷிகா என்ற இளம் நடிகை தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகம் தமிழ் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம் மற்றும் அதிர்வுகள் காரணமாக, இந்த "ரேனிகுண்டா 2" திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X