பவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?: ரேணு குமுறல்

By Siva

Recommended Video

பவர் ஸ்டார் மீது வருத்தத்தில் அவரது முன்னாள் மனைவி- வீடியோ

ஹைதராபாத்: முன்னாள் கணவர் பவன் கல்யாணின் ரசிகர்கள் தன்னை திட்டித் தீர்ப்பது குறித்து நடிகை ரேணு தேசாய் மனம் திறந்துள்ளார்.

நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவியான ரேணு தேசாய்க்கும், தொழில் அதிபர் ஒருவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்கள் ரேணுவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

ரேணுவை அசிங்கமாக திட்டினார்கள். இந்நிலையில் இது குறித்து ரேணு கூறியிருப்பதாவது,

கோவை

கோவை

என் திருமணம் வரும் டிசம்பர் மாதம் கோவையில் உள்ள இஷா மையத்தில் எளிமையாக நடக்க உள்ளது. நகை வாங்குவதற்கு பதில் அன்னதானம் செய்ய உள்ளோம்.

திட்டு

திட்டு

நிறைய பேர் திட்டி மெசேஜ் அனுப்புவதால் என் புது வாழ்க்கையின் மீது கவனம் செலுத்த முடியவில்லை. என் வருங்கால கணவரை என் குழந்தைகள் அகிரா, ஆத்யாவுக்கு மிகவும் பிடித்துள்ளது. அவரை அவர்கள் தந்தையாக ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

வாழ்த்து

வாழ்த்து

பவன் மட்டும் முன்பே எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தால் அவரின் ரசிகர்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகியிருக்க வேண்டியது இல்லை. மனமொத்து தான் விவாகரத்து பெறுகிறோம் என்று அவரை அறிக்கை விடுமாறு நான் கேட்டதற்கு மறுத்துவிட்டார்.

முடியவில்லை

முடியவில்லை

ட்விட்டரில் பவனின் ரசிகர்கள் அத்துமீறியதால் நான் அதில் இருந்து வெளியேறிவிட்டேன். பவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு மனஅழுத்தத்தால் அவதிப்பட்டேன். கவுன்சிலிங் சென்றேன்.

குழந்தைகள்

குழந்தைகள்

நான் கடந்த 8 ஆண்டுகளாக சிங்கிளாக இருந்தேன். தனி ஒருத்தியாக இருந்து 2 குழந்தைகளை வளர்ப்பது எளிது அல்ல. எனக்கு என் நண்பர்கள், குடும்பத்தார் உதவி செய்தனர்.

ஜூனியர் பவர்ஸ்டார்

ஜூனியர் பவர்ஸ்டார்

தன்னை ஜூனியர் பவர் ஸ்டார் என்று மக்கள் அழைப்பதை அகிரா வெறுக்கிறான். அவனுக்கு தனது தந்தை போன்று ஹீரோவாகாமல் எழுத்தாளர் ஆக விரும்புகிறான். அவர் ஆசைப்படுவதை செய்யட்டும் என்றார் ரேணு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X