கலைமாமணி விருது வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்… கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு!

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் எக்கச்சக்கமான படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சாய் தரம் தேஜ் உடன் இணைந்து ரிபப்ளிக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இளம் நடிகையான இவருக்கு சமீபத்தில் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது அனைவரிடத்திலும் பாராட்டுக்களை பெற்ற நிலையில் இப்போது ரிபப்ளிக் படக்குழு கேக் வெட்டி உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.

4 கதாநாயகிகளில்

4 கதாநாயகிகளில்

விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதே சாயலில் உருவாகியிருந்த வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அந்த படம் பெரும் தோல்வியை பெற்று தந்த நிலையிலும் அடுத்தடுத்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்

ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்

நானியின் ஜெகதீஸ், பவன் கல்யான் ராணா இணைந்து கலக்கும் ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இளம் நடிகை சாய் தரம் தேஜ் உடன் இணைந்து நடிக்கும் ரிபப்ளிக் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரொமாண்டிக் காதல் திரைப்படமாக உருவாகி வரும் ரிபப்ளிக் படத்தை தேவ கட்டா இயக்கி வருகிறார். ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்க இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்து வருகிறார்.

சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு

சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு

ஒவ்வொரு ஆண்டும் இயல் இசை நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது தமிழக அரசால் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலருக்கும் கொடுக்கப்பட்டு கௌரவப் படுத்தப்பட்டது.

கேக் வெட்டி உற்சாக வரவேற்பு

கேக் வெட்டி உற்சாக வரவேற்பு

கலைமாமணி விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்கனவே பலர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில் இப்பொழுது ரிபப்ளிக் படக்குழு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இந்த வீடியோவை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து உள்ளார். சிவகார்த்திகேயன், யோகி பாபு, ராமராஜன், சரோஜாதேவி, மதுமிதா, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X