twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரவிந்த்சாமியை டப்பிங் பேசக் கூடாதுன்னு நான் தான் சொன்னேன்: கார்த்திக் நரேன்

    By Siva
    |

    சென்னை: கொஞ்சமாவது பணம் கொடுக்குமாறு கவுதம் மேனனிடம் கெஞ்சினோம். அரவிந்த்சாமி இல்லாவிட்டால் நரகாசூரன் படம் என்றோ கைவிடப்பட்டிருக்கும் என்று இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

    நரகாசூரன் பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குனரும், தயாரிப்பாளருமான கவுதம் மேனன் மீது புகார் தெரிவித்துள்ளார். அவர் தன்னை குப்பையை போன்று நடத்துவதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில் கார்த்திக் நரேன் கூறியிருப்பதாவது,

    கவுதம்

    கவுதம்

    கவுதம் என் படம் ரிலீஸாவதை தாமதப்படுத்துவது பிரச்சனை அல்ல. நான் கவலைப்படுவதால் படத்தை ரிலீஸ் பண்ண முடியாது. படம் தாமதாகிறது என்று யாரும் கவலைப்படவில்லை.

    திட்டம்

    திட்டம்

    படம் இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் வெளியாகும் என்று கூறி ஒரு திட்டத்தை கவுதம் சார் தெரிவித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். சார் சொன்னது போன்று நாங்கள் கவலையில் இருந்தால், அடுத்த படத்தை துவங்க முடியாது.

    முதலீடு

    முதலீடு

    படப்பிடிப்பு முடிந்ததில் இருந்து ஏதாவது முதலீடு செய்யுமாறு அவரிடம் கெஞ்சுகிறோம். எங்களுக்கு சரியான சம்பளம் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பணமே இல்லாமல் போய்விட்டது. கொஞ்சமாவது பணம் கொடுக்குமாறு அவரிடம் கேட்டோம். ஆனால் அவர் எங்களின் போன் கால்களை புறக்கணித்துவிட்டார். அப்போது தான் எங்களுக்கு மனவேதனை ஏற்பட்டது.

    டிராப்

    டிராப்

    அரவிந்த்சாமி சார் மட்டும் இல்லை என்றால் இந்த படம் என்றோ டிராப் ஆகியிருக்கும். படப்பிடிப்புக்கு முன்பு அவர் முன்பணம் வாங்கவில்லை. இருப்பினும் நடிக்க வந்தார். அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் தாமதமாகியும் அவர் புகார் கூறவில்லை. அவர் இன்னும் டப்பிங் பேசவில்லை. நீங்க டப்பிங் பேச வேண்டாம் என்று நான் தான் அவரிடம் கூறினேன்.

    பணம்

    பணம்

    உங்களுக்கு வர வேண்டிய சம்வபளம் வந்த பிறகு டப்பிங் பேச வாங்க சார் என்று நான் அவரிடம் தெரிவித்தேன். டம்மி வாய்ஸை பயன்படுத்தி சென்சார் சான்றிதழ் பெற விண்ண்பிக்குமாறு கவுதம் சாரின் ஆட்கள் எனக்கு அழுத்தம் கொடுத்தனர்.

    சம்பள பாக்கி

    சம்பள பாக்கி

    அரவிந்த்சாமி சார் மீது எந்த தப்பும் இல்லை. கலைஞர்கள், தினசரி கூலி பெறுபவர்கள் என்று அனைவருக்கும் சம்பள பாக்கி உள்ளது. அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாததை நினைத்து குற்ற உணர்வாக உள்ளது.

    பேச்சு இல்லை

    பேச்சு இல்லை

    ட்விட்டரில் நடந்த விஷயத்திற்கு பிறகு நானும், கவுதம் சாரும் பேசிக் கொள்ளவில்லை. கவுதம் சாரின் ஆட்கள் என்னை அணுகி பிரச்சனைக்கு சில தீர்வுகளை கூறினார்கள். இனி எந்த இயக்குனரையும் அவர் இப்படி செய்யக் கூடாது என்பதற்காகவே நான் போராடுகிறேன் என்றார் கார்த்திக் நரேன்.

    English summary
    Director Karthick Naren said that Naragasooran would be dropped if not for Arvind Swami. It is Karthick Naren who asked Arvind Swami to dub after his payment is settled.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X