பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத ரேஷ்மா.. ஹவுஸ்மேட்ஸையும் கலங்க வைத்த 'அந்த' காரணம்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நேற்று மோகன் வைத்யா கதறி அழுத நிலையில் இன்று நடிகை ரேஷ்மா கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
ஆட்டம் பாட்டம், காமெடி என இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி காதல், சென்டிமென்ட், சண்டை என அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. நேற்று மோகன் வைத்யா பிக்பாஸ் வீட்டில் கதறி அழுதார்.
தனக்கு சொல்லி அழக்கூட ஆள் இல்லை என்று உருக்கமாக பேசி குமுறினார். இதைத்தொடர்ந்து வீட்டுக்குள் வந்த மீராவுக்கு எதிராக சாக்ஷியும் அபிராமியும் கூட்டு சேர்ந்து அவரை வச்சு செய்து வருகின்றனர்.

இன்று காலையில் வெளியான ப்ரமோவில் அபிராமியால் வனிதா, மீராவுக்கு இடையே சண்டை நடப்பது காண்பிக்கப்பட்டது. நினைத்தது நடந்துவிட்டது என்பதை போல் கையை காட்டிவிட்டு சென்றார் அபிராமி.
அந்த ப்ரமோவை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒரு அறையில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது ஃபாத்திமா பாபு ஒரு பேப்பரை எடுத்து ரேஷ்மாவிடம் உங்கள் குடும்பத்தில் யாருடைய இழப்பு உங்களை மிகவும் பாதித்தது என கேட்கிறார்.
அதற்கு தான் 9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டதாகவும், அப்போது திடீரென தனது குழந்தையின் இதயத்துடிப்பு வயிற்றிலேயே நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தாக கூறி அழுகிறார்.

வயிற்றுக்குள்ளேயே தனது குழந்தை இறந்ததை தன்னால் வாழ்க்கையில் எப்போதும் மறக்கவே முடியாது என்று கூறி கதறினார் ரேஷ்மா. அவரது இந்த சோகக் கதையை கேட்டு மதுமிதா, ஃபாத்திமா, ஷெரின், ஆகியோரும் கண்ணீர்விட்டனர்.

இப்படியாக முடிந்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரமோ. எப்படியோ இன்றைய எபிசோடு சண்டை, அழுகை என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











