Reshma pasupuleti: கோபியுடன் ஆட்டம் போடும் ராதிகா..இருக்கும் பிரச்சனை போதாதா? பாக்கியா தான் பாவம்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற லீட் ரோலில் நடித்து வருகிறார். இவருடன் வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் ரேஷ்மா கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து வருகிறார். தற்போது ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராமில் கோபியுடன் ஜாலியாக ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உலகமே தெரியாத ஏமாளியாக இருந்த பாக்யாவை ஏமாற்றி தனது முன்னாள் காதலியான ராதாவை திருமணம் செய்து கொண்டார் கோபி. இதனால், வீட்டில் இருந்து தனியாக பிரிந்து சென்ற கோபி, அப்பாவின் மறைவுக்கு பிறகு, அனைவரும் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வாசித்து வருகின்றனர். இதனால் அடுத்தடுத்து குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

கடுப்பில் இனியா: இனியாவின் டான்ஸ் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறாள். இதற்கெல்லாம் காரணம் ராதிகா என்று கோவப்படுகிறாள்.மேடையில் அம்மா என பாக்யா, ராதிகா இருவரும் ஏறுகின்றனர். இதனால் தான் நான் ஜெயிக்க முடியவில்லை என்று வருத்தப்படுகிறாள். இனியாவுடன் சேர்ந்து கொண்டு ஈஸ்வரியும் ராதிகாவை திட்ட, அப்போது அங்கு வரும் பாக்யா, இதற்கு காரணம் கோபி தான், ராதிகா வரமாட்டேனு சொன்ன போதும் அவர் தான் அழைத்து வந்தார் என்று சொல்ல அனைவரும் அமைதி ஆகுகின்றனர்.

பாவம் பாக்கியா: இதையடுத்து, இனியாவை சமாதானப்படுத்த அனைவரும் ஒரு நாள் டூர் போடுகின்றனர். அந்த டூரில் ரேஷ்மா கோபியுடன் கடற்கரையில் போட்ட ஆட்டத்தை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், என்ன கோபி முதல் மனைவி இருக்கும் போதே ராதிகாவுடன் ஆட்டமா என்றும், குடும்பத்துல அவ்வளவு பிரச்சனை இருக்கு இதுல உங்களுக்கு ரொமான்ஸ் கேக்குதா என்றும். பாக்கியா தான் பாவம் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான ரேஷ்மா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











