இவர் தான் நிஜ புஷ்பா புருஷனா? ரேஷ்மா பசுபுலேட்டியை மூணாவது கல்யாணம் பண்ணிக்க சொல்றாரே!
சென்னை: பாக்கியலட்சுமி, சீதா ராமன் என சின்னத்திரை சீரியல்களில் பிசியான நடிகையாக வலம் வரும் ரேஷ்மா பசுபுலேட்டி சினிமா மற்றும் வெப்சீரிஸ்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் யூடியூப் வீடியோவில் தனது மகன் உடன் ஷாப்பிங் சென்ற ரேஷ்மா பசுபுலேட்டி தனது 2வது கணவர் வெளியிட்ட வீடியோவையும் ஷேர் செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரேஷ்மா பசுபுலேட்டி விடுதலை வெப்சீரிஸில் கிச்சாவின் மனைவியாகவும் நடித்து மிரட்டி இருப்பார்.

40 வயதை நெருங்கிட்டாரு
39 வயதாகும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளிநாட்டில் படித்து வளர்ந்த நிலையில், ஆரம்பத்தில் பெற்றோர்கள் பார்த்து கட்டி வைத்த மாப்பிள்ளை செட் ஆகாத நிலையில், விவாகரத்து செய்தார். அதன் பின்னர், அமெரிக்காவில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த ரேஷ்மா பசுபுலேட்டிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இரண்டு முறை விவாகரத்து
ரகு என அந்த ஆண் குழந்தைக்கு பெயரிட்டு வளர்த்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி நடிப்பில் கொண்ட ஆர்வம் காரணமாக இரண்டாவது கணவரையும் பிரிந்து தற்போது தனது மகன் உடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். சீரியல், சினிமா, வெப்சீரிஸ் என கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்து வரும் அவர், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மகனுடன் ஷாப்பிங்
சமீபத்தில் அந்தரங்கம் அன்லிமிடட் பாட்காஸ்ட்டில் போல்டாக 18 பிளஸ் விஷயங்களை ரேஷ்மா பசுபுலேட்டி பேசியது ஏகப்பட்ட இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், தனது மகன் ரகுவுடன் ஷாப்பிங் மால் ஒன்றில் ஷாப்பிங் செய்தபடியே கேஷுவலாக பேட்டி கொடுத்த வீடியோவை யூடியூப் சேனல் ஒன்றுக்காக வெளியிட்டுள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி.

முன்னாள் கணவர்
அந்த யூடியூப் வீடியோவில் திடீரென ரேஷ்மா பசுபுலேட்டியின் முன்னாள் கணவர் வீடியோ காலில் பேசிய காட்சிகளையும் எடுத்துப் போட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளனர். ரேஷ்மாவின் நடிப்பு ஆசை காரணமாக அவர் போராடி வருவதையும், தனது மகனை இந்த அளவுக்கு வளர்த்து ஆளாக்கி இருப்பதையும் பார்க்க ரொம்பவே பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ
மேலும், இரண்டாவது விவாகரத்துக்கு பிறகு யாரையும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டியின் மனசுக்கு பிடிச்ச ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்றும் அந்த வீடியோவில் அவரது கணவர் கூறி உள்ளார். மேலும், ஏதாவது தேவைப்பட்டால் எப்போ வேணா என்னை நீங்க ரெண்டு பேருமே கான்டாக்ட் பண்ணலாம் என்றும் பேசி உள்ளார்.

3வது திருமணத்துக்கு ரெடியா
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது மகன் ரகுவுடன் பேட்டி கொடுக்க வந்த இடத்தில் தனது முன்னாள் கணவர் பேசிய வீடியோவை அதன் உடன் இணைத்திருப்பதையும், அதில் ரேஷ்மாவின் கணவர் பேசியதையும் பார்த்த ரசிகர்கள் 3வது திருமணத்துக்கு ரெடியாகி விட்டாரா ரேஷ்மா? என்றே கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், இதுவரை அது தொடர்பாக ரேஷ்மா எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தனது மகனை வளர்த்து ஆளாக்குவதிலேயே பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











