Reshma: நான் யார் கூட டேட்டிங் போனா உங்களுக்கு என்ன? கார்த்திகை தீபம் சீரியல் நடிகை பளீச்!
சென்னை: சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ரேஷ்மா பசுபலேட்டி, வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பாவாக நடித்து பிரபலமானார். வெள்ளித்திரையில் பல சீரியல்களில் நடித்து வரும் இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரேஷ்மா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், கார்த்திகை தீபம் சீரியல் இப்ப நான் வந்து ஒரு வில்லி கேரக்டர்ல நடிச்சிட்டு இருக்கேன். அந்த எபிசோடு ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் ஆரம்பம் ஆச்சு. அதுல ஒரு நல்ல கதை பாத்திரத்தில் இருக்கேன். நான் பார்ப்பதற்கு தான் வில்லி மாதிரி இருப்பேன். அதனால எனக்கு வர கதாபாத்திரமும் வில்லத்தனமான கதாபாத்திரம் தான் வருது. ஆனால் நிஜ வாழ்க்கையில நான் அப்படி இல்லை.

கேள்வி: கேமராவை பார்த்து பயந்தீங்களா? என்னுடைய அப்பா என்னுடைய தாத்தா எல்லாருமே சினிமால தயாரிப்பாளராக தமிழ், தெலுங்குனு பல படத்தை தயாரித்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அண்ணனும் நடிகர். இதனால எனக்கு சினிமாவை பார்த்து விதமான பயமும் இல்ல. ஆனால் நான் சினிமாக்கு வருவேன்னு நினைக்கவே இல்ல. அது ஒரு தற்செயலாக நடந்த விஷயம் தான் . இதனால, நான் கேமரா பார்த்து பயப்படல, அது ஒரு நல்லவிதமான அனுபவமாக இருந்தது. நான் பொதுவாகவே எந்த விஷயத்தை பார்த்தும் பயப்படக்கூடிய ஆள் இல்லை.
கேள்வி: எடை குறைந்தது எப்படி? சில பிரச்சனைகள் இருந்ததுனால திடீர்னு உடல் எடை கூடிவிட்டது. இதன் பிறகு, உடற்பயிற்சி செய்து செய்து கிட்டத்தட்ட 12 கிலோ வரைக்கும் குறைந்து இருக்கேன். ஷூட்டிங் இல்லை என்றால், நான் ஜிம்ல தான் இருப்பேன். 12 கிலோ எடையை குறைக்க ரொம்ப கஷ்டப்பட்டு, ஒன்பது மாசமா பல விஷயத்தை சாப்பிடாம தவிர்த்து வந்து இருக்கேன். குறிப்பா சுகரை தவிர்த்துவிட்டேன். அதனாலத்தான் 12 கிலோ என்னால குறைக்க முடிந்தது. சினிமால இருப்பதனால் வேற வழியே இல்ல உடம்பை குறைத்து பிட்டாக இருக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது என்றார்.
கேள்வி: நெகட்டிவ் கமெண்ட்? என்னை சிங்கிள் என்று நினைப்பவர்கள் நினைக்கட்டும், திருமணம் ஆனவர் என்று நினைப்பவர்கள் நினைக்கட்டும், டேட்டிங் செல்கிறேன் என்று நினைப்பவர்கள் நினைக்கட்டும். யார் யார்கூட போனா உங்களுக்கு என்ன? என்னை பத்தி யார் என்ன நினைக்கிறாங்க என்று தெரிந்து கொள்ளும் அவசியம் எனக்கு இல்லை. என்னோட வாழ்க்கைய சந்தோஷமா நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். நெகட்டிவ் கமெண்ட் போடுறவங்க போட்டுட்டே தான் இருப்பாங்க, அவங்கள பத்தி நாம கவலைப்பட்டா நம்மளுடைய வாழ்க்கையை வாழவே முடியாது. அதனால பொதுவா நான் instagram-ல எந்த ஒரு போட்டோ வீடியோ போட்டாலும் கமெண்ட்டை படிக்கவே மாட்டேன். நம்மள சுற்றி இருக்கிற உறவுகள் கிட்டையே நேரம் செலவழிக்க முடியாம ஓடிக்கிட்டே இருக்கோம். அப்படி இருக்கும்போது இந்த கமெண்ட் எல்லாம் பார்த்துட்டு நாம ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











