ச்சே.. என்ன பின்னாடி இப்படி கிழிஞ்சிருக்கு.. ரேஷ்மா பசுபுலேட்டியின் டிரெஸ்ஸை பார்த்து பதறிய ஃபேன்ஸ்!
சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என அசத்தி வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
டைட் டாப்ஸ் அணிந்து கொண்டு ஜிம் வொர்க்கவுட் செய்யும் போட்டோக்களை எல்லாம் பதிவிட்டு இணையவாசிகளை இம்சை செய்து வருகிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
இந்நிலையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன முதுகு பின்னாடி இப்படி கிழிஞ்சிருக்கே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ரேஷ்மா பசுபுலேட்டி: மசாலா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் ஏகப்பட்ட ரசிகர்களை இவர் பக்கம் வெகுவாக ஈர்த்துக் கொடுத்தது. விலங்கு வெப்சீரிஸில் கிச்சாவின் மனைவியாக நடித்து மோசடி பெண் கதாபாத்திரத்தில் போல்டாக நடித்திருப்பார்.
சீரியல் நடிகை: பாக்கியலக்ஷ்மி சீரியலில் நடித்த ரேஷ்மா பசுபுலேட்டிக்கு மேலும், ரசிகர்கள் அதிகரித்தனர். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் படு ஹாட்டான போட்டோக்கள், இடுப்பு டாட்டூ தெரியும் போட்டோக்கள் எல்லாமே ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது. சீதா ராமன் சீரியலில் மகாலக்ஷ்மி எனும் கதாபாத்திரத்திலும் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். விலங்கு வெப்சீரிஸ் 2லும் இவர் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஹாட்டான போட்டோஸ்: இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வரும் சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டிக்கு 1.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இரண்டு முறை திருமணம் செய்து பிரிந்த ரேஷ்மா பசுபுலேட்டி தனது மகனை தன்னந்தனியாக வளர்த்து ஆளாக்கி வருகிறார். ரேஷ்மா பசுபுலேட்டியின் இன்ஸ்டா போஸ்ட்டுகள் தினமும் டிரெண்டாகி வருகின்றன.
பின்னாடி கிழிஞ்சிருக்கு: இந்நிலையில், வெள்ளை கலர் டைட் டாப்பில் பிரவுன் கலர் சாக்கோ சிப்ஸ்கள் கொட்டிக் கிடப்பதை போன்ற டிசைன் போட்ட ஆடையை உடுத்திக் கொண்டு ஜிம் டிராக் அணிந்திருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி.

அந்த புகைப்படங்களில் தனது பின்னழகை காட்டியபடி இவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோவில் அவரது முதுகு பக்கம் அந்த ஆடை கிழிந்திருப்பது போல பாதியில் முதுகு பக்கம் ஜன்னல் வைத்த டிசைனில் உள்ளது. அதை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா பின்னாடி இப்படி கிழிஞ்சிருக்கு என கிண்டல் செய்து வருகின்றனர்.
ரேஷ்மா பசுபுலேட்டியின் மேக்கப் இல்லாத போட்டோக்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில், இந்த போட்டோக்களுக்கும் லைக்குகளும் ஹாட் குயின், அமேஸிங் அக்கா, கமெண்ட்ஸ் டிஸ் ஏபிள் பண்ண மறந்துட்டீங்க என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











