Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..செங்கோட்டையன் தலைமையில் 106 பேர்.. பெரும்படையை களமிறக்கும் இபிஎஸ்
- Sports
"சூர்யகுமார் இல்லாமல் இனி இந்திய அணி இல்லை" ரெய்னாவின் புகழ்ச்சி வார்த்தைகள்.. ரசிகர்கள் வியப்பு
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Finance
தங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000-ஐ தாண்டியது.. இனி சாமானியர்கள் வாங்குவது கடினம் தான்..!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
என் பேர்ல ஹாட் செக்ஸ் வீடியோன்னு வந்துச்சு.. குடும்பமே பதறிட்டாங்க.. ரேஷ்மா பசுபுலேட்டி ஓபன் டாக்!
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியை போலவே கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் சினிமாவில் கலக்கி வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி செம போல்டாக பேசிய வீடியோ ஒன்று தற்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் செம பாப்புலர்.
இந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப்சீரிஸில் கிச்சாவின் மனைவியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருப்பார்.
குழந்தை
பிறந்த
நாளில்
10
ஆண்டுகளாக
பூஜை
செய்கிறேன்..’நீயா
நானா’வில்
வாடகைத்தாயின்
நெகிழ்ச்சி
பதிவு

ரேஷ்மா பசுபுலேட்டி
39 வயதாகும் ரேஷ்மா பசுபுலேட்டி சினிமா, சீரியல் மற்றும் வெப்சீரிஸ் என இந்த ஆண்டு செம பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் தனக்கு ஏற்பட்ட மார்பிங் தொல்லை குறித்தும் அதை பார்த்து விட்டு குடும்பத்தினர் எப்படி ஷாக் ஆனார்கள் என்பதையும் செம போல்டாக பேசி உள்ளார்.

சுச்சி லீக்ஸ்ல சிக்கினேன்
சுச்சி லீக்ஸ் என ஒன்று டிரெண்ட் ஆனது. அப்போ என்னை பற்றிய மார்பிங் வீடியோ ஒன்றும் சோஷியல் மீடியாவில் அதிகம் டிரெண்டானது. அதை என் அம்மா பார்த்துட்டாங்க, அவங்க என்கிட்ட டைரக்ட்டா கேட்க முடியாம என் சி|ஸ்டரை விட்டு கேட்க சொன்னதுலாம் நடந்துச்சு என பேசி உள்ளார்.

ரேஷ்மா பசுபுலேட்டி ஹாட் செக்ஸ் வீடியோ
கரு பழனியப்பனிடம் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பேசும் போது, |ரேஷ்மா பசுபுலேட்டி ஹாட் செக்ஸ் வீடியோ' என்கிற பெயரில் ஒரு ஆபாச வீடியோ வலம் வந்தது. அப்போ நான் இந்தியாவுலயே இல்லை.. அமெரிக்காவில் இருந்தேன். என் சிஸ்டர் என்கிட்ட ரொம்பவே தயங்கி இப்படியொரு செக்ஸ் வீடியோ லீக் ஆகிடுச்சு டி என சொன்னார். நான் அதை எனக்கு ஃபார்வேர்ட் பண்ணுன்னு சொல்லிப் பார்த்தேன்.
|
மார்பிங் தொல்லை
அந்த வீடியோவில் இருந்த பெண்ணின் உடல் என்னை விட ரொம்பவே அழகா இருந்தது. அது நான் கிடையாது என்றும் அது முழுக்க முழுக்க மார்பிங் வீடியோ என்றும் புரிய வைத்து விட்டேன். என் குடும்பத்தினர் என்பதால் சட்டென புரிந்து கொண்டனர். பல இளம் பெண்கள் இது போன்ற மார்பிங் வீடியோ தொல்லைகளால் சிக்கி சிரமப்படுகின்றனர் என செம போல்டாக ரேஷ்மா பசுபுலேட்டி பேசிய வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

விவகாரமான வேடங்கள்
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வணக்கம் டா மாப்பிள்ளை, விலங்கு வெப்சீரிஸ் என ரேஷ்மா பசுபுலேட்டி நடிப்பது எல்லாமே ஒருவித விவகாரமான வேடங்களாகவே இருப்பதால் அவர் மீதான தவறான பார்வைகளும் அதிகரிப்பதாக நெட்டிசன்கள் கஎம்ண்ட் போட்டு வருகின்றனர். சினிமாவில் நடிக்கும் கதாபாத்திரங்களை வைத்து ரியல் லைஃப்பிலும் அந்த நடிகை அப்படி பட்டவர் தான் என நினைப்பது சரியான விஷயம் இல்லை என்றும் ரேஷ்மா பசுபுலேட்டியின் போல்டான பேச்சு சூப்பர் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.