»   »  ஒரு படம் நடிச்சதுக்குள்ள நயன்தாரா ரேஞ்சுக்கு பிகு பண்ணும் நடிகை

ஒரு படம் நடிச்சதுக்குள்ள நயன்தாரா ரேஞ்சுக்கு பிகு பண்ணும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் ஹீரோயின் ஓவராக பந்தா பண்ணுகிறாராம்.

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடித்துள்ள படம் அதாகப்பட்டது மகாஜனங்களே. இந்த படம் மூலம் உமாபதி ஹீரோவாகியுள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ளார்.

ரேஷ்மாவின் முதல் தமிழ் படம் இது தான்.

ரேஷ்மா

ரேஷ்மா

ஹைதராபாத்தை சேர்ந்த ரேஷ்மா தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். மார்க்கெட் இல்லாத நிலையில் தான் தமிழுக்கு வந்துள்ளார்.

பந்தா

பந்தா

முதல் படத்திலேயே ரேஷ்மா கெட்டப் பெயர் எடுத்துள்ளார். ஷூட்டிங்ஸ்பாட்டில் ஓவர் பந்தா செய்து இயக்குனருக்கு டென்ஷன் ஏற்பட வைத்தாராம்.

 கெட்ட பெயர்

கெட்ட பெயர்

இயக்குனர் ஒரு உடையை கொடுத்து அணிய சொன்னால் இது எல்லாம் போட மாட்டேன் எனக்கு பிடித்த உடை தான் அணிவேன் என்று இயக்குனரை பாடாய் படுத்தினாராம்.

 விளம்பரம்

விளம்பரம்

ரேஷ்மாவின் டார்ச்சரை தாங்கிக் கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடித்தார்களாம். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் நயன்தாரா மாதிரியே நான் வர மாட்டேன் என்று கூறி வரவே இல்லையாம். ரேஷ்மாவின் சேட்டை பற்றி தான் கோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

English summary
Actress Reshma Rathore, the leading lady of Adhagappattathu Magajanangalay has spoiled her name by throwing tantrums.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil