அவன் என் பாய் ஃபிரெண்டுன்னு உனக்குத் தெரியுமா?.. உன் புருஷனுக்கு பதில் நீ ஏன் பேசின.. அனுகிரகா ஆவேசம்!

சென்னை: ரெசார்ட் வெப்சீரிஸ் நடிகை அனுகிரகா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்காக பணம் கட்ட முயன்ற அவரது நண்பர் விஜய் குமார் ராஜேந்திரனிடம் பேசும் போது நீ ஏன் போனை வாங்கி பேசின என அனுகிரகா மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனக்காக என் நண்பர் பேசுவது தவறு என சொல்லும் நீங்க, தயாரிப்பாளரோ, இயக்குநரோ கிடையாதே, நீங்க ஏன் விஜய் குமாருக்கு பதில் பேசுனீங்க, பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல நீங்க வீடியோ வெளியிட்டு நீங்களே மாட்டிக்கிட்டீங்க என அனுகிரகா கிளாரிஃபிகேஷன் கேட்டீங்களே இதோ கிளாரிஃபிகேஷன் என மலையாளத்தில் பேசி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துவிட்டார்.

Resort Actress Anugraha Nambiar again slammed Nakshatra with clarity points
Photo Credit:

8 மாதங்கள் வேலை தருவதாக ஏமாற்றி, ஒவ்வொரு முறையும் கேட்கும் போதெல்லாம் உங்க கணவர் விஜய் குமார் ஏன் உன்னோட ரோல் பெருசாகுது, வெயிட் பண்னு வெயிட் பண்ணுன்னு சொல்லி ஏமாத்துனாரு, அவர் ஏன் வாயே திறக்க மாட்டுறாரு எனக் கேட்டுள்ளார்.

அவன் என் பாய் ஃபிரெண்டுக்கு உனக்குத் தெரியுமா?: வார்த்தைக்கு வார்த்தை அவன் என் பாய் ஃபிரெண்டுன்னு சொல்றியே நக்‌ஷத்ரா அவன் என் பாய் ஃபிரெண்டுன்னு உனக்குத் தெரியுமா? அவன் என் நண்பனாக இருக்கலாம், அண்ணனாக இருக்கலாம், ஏன் அப்பாவாக கூட இருக்கலாமே, முதலில் நீ ஏன் போனை வாங்கி பேசின, மலையாளம் தெரியும்னு சொல்லி போன் வாங்கி பேசும் போது, நீங்க கேட்ட புரொஃபசனலிசம் எங்க போச்சு, நீ என்ன என்ன மோசடி செய்ற எத்தனை பேரை ஏமாத்திருக்க என எல்லா எவிடன்ஸும் என் கிட்ட இருக்கு, இப்போ நீயே வீடியோ போட்டு விளக்கம் தரேன்னு பேசி மாட்டிக்கிட்ட என அனுகிரகா மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

உன் கணவர் தான் ஏமாற்றினார்: கேஷியர் கண்ணனுக்குத்தான் முதலில் கால் பண்ணேன், உனக்கோ உன் கணவருக்கோ கால் பண்ணவில்லை. அவர் தான் விஜய் குமார் தான் கதை எழுதுறாரு, அவர் கன்ட்ரோலில் தான் மொத்த வெப்சீரிஸும் ரெடியாகுது, அவரிடம் கேளுங்கள் என்றார். 8.30 மணி முதல் போன் செய்தேன் அவர் எடுக்கவே இல்லை. ஏகப்பட்ட மிஸ்டு கால்ஸ் இருக்கு. எனக்கு பதிலாக என் நண்பர் அக்கறையின் பேரில் கேட்டது குத்தமா? உன் கணவர் தான் கடந்த 8 மாதங்களாக என்னை எங்கேயும் போக விடாமல் உன் கேரக்டர் பெருசா வரப்போகுதுன்னு சொல்லி சொல்லியே எனக்கு சான்ஸ் கொடுக்காமலும் சம்பளம் கொடுக்காமலும் ஏமாற்றினார். கண்டிப்பா விஜய் குமார் இதற்கு பதிலளித்தே தீர வேண்டும் நான் சும்மா விட மாட்டேன் என மலையாளத்திலும் பேசி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.

புகார் கொடுங்க: இன்ஸ்டாகிராமில் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்வது வீண் தான் என்றும் ஒருவரை ஒருவர் எக்ஸ்போஸ் செய்வதை விட காவல் துறையில் புகார் கொடுங்க என அனுகிரகாவுக்கு நெட்டிசன்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். அக்ரிமெண்ட்டை ஒழுங்காக படித்திருக்க வேண்டும் என நக்‌ஷத்ரா சொல்லியுள்ள நிலையில், ஒரு வருட அக்ரிமெண்ட் போடும் பட்சத்தில், அந்த ஒரு வருடத்துக்கான ஊதியத்தையும் வழங்க வேண்டுமே இது தொழிலாளர்களை நசுக்கும் செயல் அல்லவா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X