என் குடும்பத்தையே அசிங்கப்படுத்திட்ட.. ரெசார்ட் நடிகை அனுகிரகா மீது மானநஷ்ட வழக்குப் போட்ட நக்ஷத்ரா
சென்னை: லைவ் வீடியோவிலும் கிளாமர் காட்டி இந்த பொண்ணு ரசிகர்களை கவர் செய்து ஃபாலோயர்களை அதிகரிக்காங்க என ட்ரோல்கள் குவிந்த நிலையில், அனுகிரகா துப்பட்டாவை போட்டுக் கொண்டு இனிமேல் ரெசார்ட் தொடரில் நடிக்கவே மாட்டேன் என்றும் இந்த பிரச்னையை இத்துடன் முடித்துக் கொள்ள விரும்புவதாக இன்னொரு வீடியோ போட்டு பரபரப்பை பற்ற வைத்தார்.
சரியாக சம்பளம் தரவில்லை என்றும் கடந்த 8 மாதங்களாக தன்னை விஜய் குமார் ராஜேந்திரன் ஏமாற்றிவிட்டார் என்றும் தனக்காக பணம் கேட்ட நண்பரை விஜய் குமார் மனைவி அசிங்கமாக திட்டினார் என்றும் அதனால் சூ*சைட் பண்ணிக்கப் போறேன் என ரெசார்ட் வெப்சீரிஸில் நடித்த அனுகிரகா நம்பியார் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பியது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் குமார் ராஜேந்திரன் மனைவி நக்ஷத்ரா ஒரு வீடியோ வெளியிட்டார். அதன் பின்னர் விஜய்யும் ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கமளித்தார். இந்நிலையில், தன்னையும் தனது குடும்பத்தையும் அசிங்கப்படுத்திய நக்ஷத்ராவை சும்மா விடமாட்டேன் என்றும் மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக நக்ஷத்ரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இனி நடிக்க மாட்டேன்: ரெசார்ட் வெப்சீரிஸ் டீம் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரச்னை பெரிதாக வெடித்த நிலையில், தன்னை ஏமாற்றிய படக்குழுவுடன் இனிமேல் தொடர்ந்து பணியாற்ற மாட்டேன் என அனுகிரகா கடைசியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வெப்சீரிஸில் இவர் மெயின் கேரக்டர் எல்லாம் கிடையாது. சாதாரண ரூம் சர்வீஸ் டீமில் உள்ள பெண் கதாபாத்திரம் மட்டுமே.
சும்மா விடமாட்டேன்: அனுகிரகா தப்பித்து சென்று விடலாம் என நினைத்தாலும், தன்னையும் தனது குடும்பத்தையும் அசிங்கப்படுத்திய உன்னை சும்மா விடமாட்டேன். மான நஷ்ட வழக்கு போடப்போகிறேன். கண்டிப்பாக கோர்ட்டில் வந்து உன்னோட பொய்யான கதைகளை சொல்லு என எருமை சாணி புகழ் விஜய் குமாரின் மனைவி நக்ஷத்ரா ஒரே போடாக போட்டுள்ளார்.
விஜய் குமார் ராஜேந்திரனும் முன்னதாக வெளியிட்ட வீடியோவில் சட்டப்படி அவரது குற்றச்சாட்டை எதிர்க்க தயார் என்றும் முழு தவறும் அவர் மீதுதான் உள்ளது என்றும் விளாசி இருந்தார். ஏற்கனவே பட வாய்ப்பு கிடைக்காமல் சம்பளமும் இல்லாமல் தவித்து வரும் அனுகிரகா இந்த மான நஷ்ட வழக்கை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications