சூ*சைட் பண்ணிக்கப்போறேன்.. எருமை சாணி விஜய் பொண்டாட்டி தான் காரணம்.. ’ரெசார்ட்’ நடிகை பகீர் வீடியோ

சென்னை: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வார வாரம் வெள்ளிக்கிழமை புதிதாக 4 எபிசோடுகளுடன் இதுவரை 28 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எருமைசாணி யூடியூப் மூலம் புகழ்பெற்ற விஜயகுமார் தான் இதில் லீடு ரோலில் நடித்து வருகிறார். தலைவாசல் விஜய், மஹிமா நம்பியார், அபிநயா நேத்ரன் உள்ளிட்ட பலர் இந்த வெப்சீரிஸில் நடித்து வருகின்றனர்.

இதில், ரூம் சர்வீஸ் லேடியாக நடித்த நடிகை அனுகிரகா நம்பியார் தற்போது இன்ஸ்டாகிராமில் லைவ் போட்டு தனக்கு அநீதி நடந்துள்ளதாக அழுது புலம்பிய வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Resort Webseries Actress Anugraha Nambiar blames Erumasani Vijaykumar and his Wife spoiled her life

ஏற்கனவே சின்னத்திரை நடிகைகள் சிலர் மன அழுத்தம் காரணமாக உயிரிழந்த நிலையில், அனுராகா நம்பியார் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணம் தராமல் ஏமாத்துறாங்க: கேரளாவில் ஒரு சின்ன கிராமத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் வந்த தனக்கு ஹீரோயின் வாய்ப்பு தருவதாக அழைத்து இந்த ரெசார்ட் வெப்சீரிஸில் நடிக்க வைத்தனர். ஒரு வருட அக்ரிமெண்ட் போட்டு வேறு எங்கும் வேலை செய்ய முடியாதபடி லாக் செய்த நிலையில், கடந்த 7 மாதங்களாக ஷூட்டிங்கிற்கே பெரிதாக அழைக்காமல் ஏமாற்றி வருகின்றனர். நேற்று ஃபிக்ஸ் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். என்னுடைய நண்பர் போன் செய்து தயாரிப்பு தரப்பிடம் பணம் கேட்ட நிலையில், அதற்கு எருமை சாணி விஜய்யின் மனைவி நக்‌ஷத்திரா அசிங்க அசிங்கமாக பேசியுள்ளார் என லைவ் வீடியோவில் புலம்பித் தள்ளியுள்ளார்.

Resort Webseries Actress Anugraha Nambiar blames Erumasani Vijaykumar and his Wife spoiled her life

சூ*சைட் பண்ணிக்கப் போறேன்: நான் இதுபோன்ற லைவ் வீடியோக்களை இதற்கு முன் போட்டது கிடையாது. போன் செய்த என் நண்பரை பாய் ஃபிரெண்ட் என நினைத்துக் கொண்டு விஜயகுமார் மனைவி நக்‌ஷத்ரா "நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டுப்போ, இல்லைன்னா மூடிட்டு வந்து நடிக்க சொல்லுடா ம*யிறு" என திட்டியுள்ளார். அவங்க எப்படி அப்படி பேசலாம். இதுக்கெல்லாம் காரணமே அவங்க தான். ஜியோ ஹாட்ஸ்டாரில் மற்ற டீம் எல்லாம் நடிக்க அழைத்த போதும் கூட குளோபல் வில்லேஜ் தயாரிப்பு நிறுவனம் என்னை நடிக்க அனுமதிக்காமல் தடுத்து விட்டனர்.

எனக்கு வேலையும் இல்லை, வருமானமும் இல்லை, நான் பசியால் வாடி வதங்கி வருகிறேன். இதுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் சூசைட் பண்ணிக்குவேன் என்றும் பகீர் கிளப்பியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து அவரது வீடியோவை சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். சமீபத்தில் விஜய் டிவி ஷூட்டிங்கில் வாட்டர் மெலான் திவாகரை மாகாபா ஆனந்த் குடித்துவிட்டு அடித்தார் என புகார் ஒன்று கிளம்பியது. தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X