உடல் முழுவதும் சேறு.. நிஜ விவசாயியாகவே மாறிய சல்மான் கான்.. விவசாயிகளுக்கும் சல்யூட்!

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

54 வயதாகும் இந்தியாவின் சூப்பர் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார் நடிகர் சல்மான் கான்.

இந்த லாக்டவுனில் தனது பண்ணை வீட்டில் பொழுதை கழித்து வரும் அவர், தோட்டக் கலைகளிலும், விவசாயம் செய்வதிலும் அதிக ஈடுபாட்டை காட்டி வருகிறார்.

வளரும் தனித் திறமை

வளரும் தனித் திறமை

கெட்ட விஷயத்திலும் ஒரு நல்ல விஷயம் என்று சொல்வதை போல, இந்த மூன்று மாத லாக்டவுனில், மக்கள் பலரும் தங்கள் தனித் திறமைகளை அதிகமாக வளர்த்து வருகின்றனர். வீட்டை தூய்மைப் படுத்துவதில் இருந்து, உடற்பயிற்சி, விவசாயம் என பல திறமைகளையும் வெளிக் கொண்டு வர இந்த லாக்டவுன் அதிக நேரத்தை அவர்களுக்கு வழங்கி வருகிறது.

லாக்டவுன் ஷூட்டிங்

லாக்டவுன் ஷூட்டிங்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் இந்த லாக்டவுனில், தனது பண்ணை வீட்டில், நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உடன் இணைந்து ஒரு வீடியோ பாடலையே ஷூட் செய்து, அதன் வீடியோவை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் சினிமா பாடல்களுக்கு சற்றும் குறைவில்லாமல் அந்த பாடலை சல்மான் கானே உருவாக்கி இருந்தார்.

விவசாயி

விவசாயி

தன்னை பற்றி யார் என்ன சொன்னாலும், அதை பற்றியெல்லாம் கவலைப் படாமல், நம்பிக்கை விதையை விதைத்துக் கொண்டு இருப்பதை போல, பச்சை வயல்களுக்கு நடுவே பாசிட்டிவிட்டியை க்ரியேட் செய்து வருகிறார் நடிகர் சல்மான் கான். முற்றிலுமாக விவசாயியாகவே மாறிய அவர், தனது வயல் வெளியில் நின்றபடி சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட புகைப்படம் பலரது மனங்களையும் கொள்ளை அடித்து இருந்தது.

விவசாயிகளுக்கு சல்யூட்

விவசாயிகளுக்கு சல்யூட்

இந்நிலையில், தற்போது உடல் முழுவதும் சேறு பட்ட நிலையில், சல்மான் கான் எடுத்துள்ள புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, " Respect to all the farmers" என கேப்ஷன் கொடுத்து ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் ராயல் சல்யூட் வைத்துள்ளார் சல்மான் கான். அவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், வேற லெவலில் அவரை பாராட்டி வருகின்றனர்.

உலகமகா நடிப்புடா சாமி

உலகமகா நடிப்புடா சாமி

சல்மான் கானின் இந்த புகைப்படத்தை பார்த்த சில நெட்டிசன்கள், இது உலக மகா நடிப்புடா, உண்மையான விவசாயி கூட இந்த அளவுக்கு உடம்புல சேத்த பூசிக்க மாட்டான்.. படத்துல தான் இப்படி நடிக்கிறீங்கன்னா.. போட்டோவுக்கு கூட இப்படி நடிக்கணுமா? என அவரது உடலில், ஃபேக்காக மண் பூசப்பட்டு இருக்கிறது என்று வட்டம் போட்டு காண்பித்து பங்கமாக ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

ராதே

ராதே

அன் லாக்டவுன் 2.0 நடப்பதால் விரைவில் பாலிவுட் பட ஷூட்டிங் எல்லாம் தொடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி நடிக்கவுள்ள ராதே படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்க உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்புகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X