July Releases: ஜூலையில் அடுத்தடுத்த ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள்.. எல்லாமே அதிரடியா இருக்கே!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்றைய தினம் மாவீரன் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இன்றைய தினம் பாபா பிளாக் ஷிப் படமும் வெளியாகியுள்ளது.

ஜூலையில் முதல் இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்காக மற்றும் ரிலீசுக்காக வெயிட்டிங்.

அடுத்தடுத்து விஜய் ஆண்டனி, சந்தானம், பரத், அர்ஜூன் தாஸ், ஹரீஷ் கல்யாண் என முன்னணி ஹீரோக்களின் படங்கள் வரும் வாரங்களில் ரிலீசாகவுள்ளது.

Rest of this month releases list released and Vijay Antony, Santhanam movies in the expectation list

ஜூலையில் அடுத்தடுத்த ரிலீசுக்கு தயாராகும் படங்கள்: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகிபாபு என மெகா கூட்டணியில் உருவாகி இன்றைய தினம் ரிலீசாகியுள்ள படம் மாவீரன். இந்தப் படத்தை மண்டேலா என்ற சிறப்பான படத்தை கொடுத்துள்ள மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். படம் இன்றைய தினம் ரிலீசாகியுள்ள நிலையில், பரவலாக சிறப்பான விமர்சனங்களையே பெற்றுள்ளது. படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் இந்தப்படத்தை இன்றைய தினம் முதல்நாள் முதல் ஷோவாக திரையரங்குகளில் ரசிகர்களுடன் சென்று பார்த்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்தை நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் திரையரங்கில் சென்று பார்த்துள்ளார். முன்னதாக படத்தின் பிரீமியரில் பங்கேற்ற நடிகர் உதயநிதியும், படத்திற்கு சிறப்பான விமர்சனத்தை கொடுத்திருந்தார். இந்நிலையில் திரையரங்குகளில் படத்தை பார்த்துவிட்டு திரும்பிய ரசிகர்களும் படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளனர். மேலும் ட்விட்டர் பக்கத்திலும் படத்திற்கான விமர்சனங்கள் சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் பாபா பிளாக் ஷீப் என்ற படமும் ரிலீசாகியுள்ளது. அயாஸ், அம்மு அபிராமி, விக்னேஷ்காந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தை புட் சட்னி யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ராஜ்மோகன் இயக்கியுள்ளார். யூடியூப் சேனலில் கலக்கலான பர்பார்மென்சை கொடுத்துவரும் பலரும் சினிமாவிற்கு தகுந்தபடி தன்னை தயார் செய்துக் கொள்ளத் தவறுகிறார்கள். அந்த வகையில் ராஜ்மோகனுக்கும் பாபா பிளாக் ஷீப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்துள்ளது.

மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் அடுத்ததாக வரும் இரண்டு வாரங்களில் சிறப்பான பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரசிகர்களுக்காக வெயிட்டிங். அடுத்த வாரம் ஜூலை 21ம் தேதி விஜய் ஆண்டனியின் கொலை மற்றும் அர்ஜூன் தாசின் அநீதி படங்கள் வெளியாகவுள்ளன. இதில் டிடெக்டிவ் ஏஜெண்டாக விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. அதேபோல அர்ஜூன் தாசின் அநீதி படமும் ரசிகர்களின் காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த மாதத்தின் இறுதியில் அதாவது ஜூலை 28ம் தேதியும் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ், பரத்தின் லவ் மற்றும் தோனி தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், நதியா, இவானா ஆகியோர் நடித்துள்ள LGM படமும் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், தொடர்ந்து படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் ப்ரமோஷன்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X